உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முன்மொழிவுகள் அனுப்பக் கோரி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 13, 2024

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முன்மொழிவுகள் அனுப்பக் கோரி இயக்குநர் உத்தரவு!



உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முன்மொழிவுகள் அனுப்பக் கோரி இயக்குநர் உத்தரவு!

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முன்மொழிவுகள் அனுப்பக் கோரி ஆதி திராவிடர் நலத் துறை இயக்குநர் உத்தரவு!

சார்நிலைப்பணித்தொகுதி - ஆசிரியர் பணியமைப்பு - கல்வி - பள்ளிகள் - 01 03. 2024 அன்றைய நிலையில் உதவிக்கல்வி அலுவலர்/பள்ளித்துணை ஆய்வாளர்/ நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் / பட்டதாரி

ஆசிரியர்கள் / பட்டதாரி காப்பாளர் ஆகியோர்களை கொண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கிட (31.12.2007 வரை பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் மட்டும் ) முன்மொழிவுகள் அனுப்பக்கோரல் - தொடர்பாக.

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணை எண்.W.P.No.32802 of 2017 and WMP No.37214, 36142 & 36141 of 2017 & 262 of 2018 date: 23.04.2024

2 மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணை எண். W.A.N0.313 0f 2022. Date:02/06/2023

3 தொடர்புடைய ஆவணங்கள். ஆதிதிராவிடர் நல துறையின் கீழ் 108 அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன இப்பள்ளிகளில் தலா ஒரு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் (9300-34800 தர ஊதியம் 4800 மற்றும் தனி ஊதியம் (Personal pay) ) தற்போதைய ஏழாவது ஊதிய நிர்ணயத்தில் 36900-116600 மற்றும் தனி ஊதியம் (Personal pay)) ரூ.2000/- ஆகும்.

அரசு ஆணை (நிலை) எண்.143 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந7) துறை, நாள்.17.11.2006-ன்படி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட துறைத்தேர்வுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1) சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1

2) மாவட்ட அலுவலக நடைமுறை நூல் தேர்வு (தற்போது தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல் தேர்வு).

எனவே, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் (முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நீங்கலாக) உதவிக்கல்வி அலுவலர்/பள்ளித்துணை ஆய்வாளர்/ நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள்/ காப்பாளர் காப்பாளினி ஆகியோர்களுக்கிடையேயான ஒருங்கிணைந்த பணிமூப்புப்பட்டியலின்படி கல்வித்தகுதி மற்றும் துறைத்தேர்வுகள் தேர்ச்சி பெற்று தகுதியானவர்களைக் கொண்டு தேர்ந்த பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு பதவி உயர்வு மூலம் நிரப்பிட தகுதியானவர்களின் பெயர் பட்டியலை அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், 01.03.2024 ஆம் ஆண்டுக்கான தற்காலிக தேர்ந்தோர்பட்டியலை (Tentative Panel ) தயார் செய்யும் பொருட்டு (31.12.2007 வரை பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் மட்டும்) பணிமூப்பும், கல்வி தகுதி துறைத்தேர்வு தேர்ச்சியும் கொண்ட ஆசிரியர்களின் ( ஓழுங்கு நடவடிக்கை நீதிமன்ற வழக்குகள் குற்றவியல் வழக்குகள் இல்லாமல் உள்ள ) விருப்பத்துடன் கூடிய கருத்துருக்களை பணிப்பதிவேட்டுடன் கவனமுடன் ஆய்வு செய்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் விடுபடாமல் அனைத்து விவரங்களையும் தனியர்களது கல்விச்சான்று நகல்களுடன் இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்தும் TET. ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றதற்கான நகல், ஆசிரியர் தேர்வு வாரியம் TRB மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் ஆசிரியர் தேர்வு வாரிய நியமன ஆணை (தர எண்ணுடன்) நகலுடன் அனுப்பிவைக்கும்படியும், பதவி உயர்வு துறப்பு செய்பவர்கள் குறித்த விவரத்தினை உரிய படிவத்தில் பதிவு செய்த 16 .08.2024-க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரின் பரிந்துரையுடன் அனுப்பிவைக்கும்படியும் மற்றும் தகுதியான நபர் எவரும் இல்லையெனில் “இன்மை அறிக்கை"" அனுப்பிவைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், தகுதி பெற்றவர்களின் பெயர் விடுபட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என கண்டிப்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு: படிவம்

👇👇👇 CLICK HERE TO DOWNLOAD ADW - HS HM Promotion Proposal PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.