மாவட்டக்கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் பணியில் இருந்து பள்ளிக்கல்வி இயக்குநர் /தொடக்கக்கல்வி இயக்குநரின் நேர்முக உதவி அலுவலர் /நிதிக்காப்பாளர் ஆக பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் வெளியீடு.
தமிழ்நாடு பொதுப்பணியில் (Category | of LXI)ன் கீழ் வரும் பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவி அலுவலர் / தொடக்கக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவி அலுவலர் மற்றும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன நிதிக் காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு 2023-24ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிட மதிப்பீட்டின் அடிப்படையில் தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக மேற்காண் பணியிடங்களுக்கு ஊட்டுப்பதவியான (Feeder Category) மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முன்னுரிமைப் பட்டியலின்படி சார்நிலை அலுவலர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டு பள்ளிக் கல்வி இயக்குநரால் பரிசீலிக்கப்பட்டு 2023-24 ஆம் ஆண்டிற்கான உத்தேச தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் பணி முன்னுரிமையின்படி, இணைப்பில் கண்ட 13நபர்கள் அடங்கிய தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலுக்கு இயக்குநரால் ஒப்புதல் அளித்து ஆணையிடப்படுகிறது.
இத்துடன் இணைத்தனுப்பப்படும் 2023-24ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவி அலுவலர் / தொடக்கக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவி அலுவலர் மற்றும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன நிதிக் காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலினை அரசாணை (நிலை)எண்.707 பணியாளர் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை நாள்.03.07.2007ல் கண்டுள்ள நெறிமுறைகளின்படி, பட்டியலில் கண்டுள்ள அலுவலர்களுக்கு தெரிவித்து அவர்களது ஒப்புதலை பெற்றனுப்புமாறு தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (த.பி.பா) மேலும், இத்தேர்ந்தோர் பட்டியலில், பெயர் சேர்க்க தகுதி படைத்த மாவட்டக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் எவரது பெயரேனும் விடுபட்டிருப்பின் உரிய ஆவணங்களுடன் (நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் / பதவி உயர்வு / பணி வரன் முறை ஆணை நகல்களுடன்) சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் பரிந்துரையுடனும், பார்வை 3ல் காணும் 25.06.2024 நாளிட்ட செயல்முறைகளில் தெரிவித்தவாறு மந்தண அறிக்கைகளுடனும் தனி நபர் மூலம் மூலம் 22.08.2024 தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும் எனவும், மேற்குறிப்பிட்ட தேதிக்குள் இத்தேர்ந்தோர் பட்டியல் சார்ந்து முறையீடுகள் ஏதும் பெறப்படவில்லை எனில் இதனையே இறுதிப் பட்டியலாக கருதி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்டக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்களாக பணிபுரியும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தும்படியும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் ', கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்செயல்முறைகளின்படி இணைப்பில் கண்டுள்ளவாறு ஏற்பளிக்கப்பட்ட தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல் என்பதால் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள அலுவலர்களுக்கு பின்வரும் காலத்தில் முன்னுரிமை கோரும் உரிமையை அளிக்காது என்ற நிபந்தனைக்கு உட்பட்டது என்றும் ஆணையிடப்படுகிறது.
இச்செயல்முறைகளை பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலினை மறு நினைவூட்டுக்கு இடமின்றி உடன் மறு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு- தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல். தமிழ்நாடு பொதுப்பணியில் ( Category | of LXI ) ன் கீழ் வரும் பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவி அலுவலர் / தொடக்கக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவி அலுவலர் மற்றும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன நிதிக் காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு 2023-24ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிட மதிப்பீட்டின் அடிப்படையில் தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக மேற்காண் பணியிடங்களுக்கு ஊட்டுப்பதவியான ( Feeder Category ) மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முன்னுரிமைப் பட்டியலின்படி சார்நிலை அலுவலர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டு பள்ளிக் கல்வி இயக்குநரால் பரிசீலிக்கப்பட்டு 2023-24 ஆம் ஆண்டிற்கான உத்தேச தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் பணி முன்னுரிமையின்படி ,
இணைப்பில் கண்ட 13 நபர்கள் அடங்கிய தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலுக்கு இயக்குநரால் ஒப்புதல் அளித்து ஆணையிடப்படுகிறது.
👇👇👇👇👇 Proceedings - CLICK HERE TO DOWNLOAD PDF
Panel - CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.