நீட் தேர்வில் 705 எடுத்த மாணவி பிளஸ்2 துணைத் தேர்விலும் தோல்வி! என்ன நடந்திருக்கும்?
நீட் தேர்வு முறைகேடு ஒரு பக்கம் சந்தேகத்தைக் கிளப்ப, ஒரு சாதாரண பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் தேர்ச்சி கூட பெற முடியாத நிலையில், எவ்வாறு நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் எடுத்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
ஆனால், இதற்கான பதிலும் நீட் தேர்வே தருகிறது, அதாவது, நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதுமே, நீட் தேர்வு மையங்கள் நாடு முழுவதும் காளான் போல முளைக்கத் தொடங்கிவிட்டன. அவை, பெரும்பாலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 11ஆம் வகுப்பு முதல் பயிற்சி அளிக்கின்றன. கோட்டா போன்ற நகரங்களிலும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்குத்தான் பயிற்சி அளிப்பார்களே தவிர பள்ளிப் பாடத் தேர்வுக்கு அல்ல.
கடைசியாக தேர்வுக்கு ஒரு சில வாரங்கள் அல்லது ஒரு மாதம் மட்டுமே மாணவ, மாணவிகள் படிக்க வாய்ப்பு கிடைக்கும். முழுக்க முழுக்க ஒரு மதிப்பெண் கேள்விகளை மட்டுமே படித்து வந்த மாணவர்கள், ஒரு மாத காலத்துக்குள் பள்ளிப் பாடம் முழுவதையும் தேர்வுக்கு ஏற்றது போல படிக்க வேண்டும். இதனால், அவர்களால் பள்ளித் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க முடியாமல் போகும் நிலை ஏற்படும். ஆனால், அவர்கள் நுழைவுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற நிலையில்தான், நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துவிட்டு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவியின் நிலையும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த மாணவிதான், குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவராக அறியப்படுகிறார். அவர் இயற்பியலில் 99.89 சதவிகிதம், வேதியியலில் 99.14 சதவிகிதம், உயிரியலில் 99.14 சதவிகிதம் எடுத்திருக்கிறார். இந்த மதிப்பெண்ணுக்கு அவர் நாட்டில் உள்ள மிகப்பெரிய மருத்துவக் கல்லூரியில் இலவசமாகவே மருத்துவம் பயில முடியும். ஆனால் என்ன அவர் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாததால், மேற்படிப்புக்காக கல்லூரிகளில் சேர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
Thursday, August 1, 2024
New
நீட் தேர்வில் 705 எடுத்த மாணவி பிளஸ்2 துணைத் தேர்விலும் தோல்வி! என்ன நடந்திருக்கும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.