மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு தேதி மாற்றம்!! - DSE BT COUNSELLING DATE CHANGE!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 6, 2024

மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு தேதி மாற்றம்!! - DSE BT COUNSELLING DATE CHANGE!!!மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு தேதி மாற்றம்!!

மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு 11.7.2024க்கு பதிலாக 12.7.2024 அன்று முதல் நடைபெறும்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6

15.5.6. 26366 / 3 / 81/2024 . 05.07.2024

பொருள்:

பள்ளிக் கல்வி - 2024-25ல் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு வெளியிடுதல் சார்பு. திருத்திய காலஅட்டவணை

பார்வை:

1 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 5.5.6.17929/1/4/2023.6.5.2024

2 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 5.5.6.26366 / 3 / 1 / 2024 .10.5.2024, 15.5.2024 0 22.06.2024

-0-

பார்வை-2ல் காணும் 22.6.2024 நாளிட்ட செயல்முறைகளின்படி 2024-25ம் கல்வியாண்டிற்கு அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கான திருத்திய காலஅட்டவணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் வருகின்ற 08.07.2024 முதல் ஒவ்வொரு பதவிவாரியாக உள்மாவட்டம் / வெளிமாவட்டத்திற்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மேற்படி கலந்தாய்வு அட்டவணையின்படி 10.07.2024 அன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்திற்குள் (Within Dist.) கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. அவ்வமயம் அன்றைய நாளில் (10.7.2024) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் பணி நடைபெறவுள்ளதாலும், இத்தேர்தல் பணியினை மேற்கொள்ள ஆசிரியர்கள் செல்லவிருப்பதால் 10.07.2024 ιό நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான வருவாய் மாவட்டத்திற்குள் உள்ள கலந்தாய்வினை (Within dist. BT Asst. Counselling) விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் 11.07.2024 அன்று பிற்பகல் 02.00 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கலாகிறது. இதர மாவட்டங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான வருவாய் மாவட்டத்திற்குள் 10.7.2024 அன்று கலந்தாய்வு நடைபெறும்.

மேலும், இதன் தொடர்ச்சியாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் (Inter Dist. Counselling) 11.07.20245 6 12.07.2024 அனைத்து மாவட்டங்களுக்கும் நடைபெறும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

இத்தகவலை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்திடவும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.