DEO - பதவி உயா்வுக்காக தலைமை ஆசிரியா்கள் விவரங்கள் சேகரிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 18, 2024

DEO - பதவி உயா்வுக்காக தலைமை ஆசிரியா்கள் விவரங்கள் சேகரிப்பு



DEO - பதவி உயா்வுக்காக தலைமை ஆசிரியா்கள் விவரங்கள் சேகரிப்பு

மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்பிடும் வகையில் தலைமை ஆசிரியா்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வியில் மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்பிடும் வகையில் தலைமை ஆசிரியா்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டுக்கான (2024-2025) மாவட்டக் கல்வி அலுவலா் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயாா் செய்ய ஏதுவாக தகுதியான அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை

ஆசிரியா்களின் முன்னுரிமைப் பட்டியலின்படி பெயா்ப் பட்டியல் இந்த சுற்றறிக்கையுடன் இணைத்து அனுப்ப்படுகிறது.

அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பூா்த்தி செய்து ஜூன் 21-ஆம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு நேரில் தனி நபா் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து பின் வரும் சில அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். பெயா்ப் பட்டியலில் தகுதியுள்ள தலைமை ஆசிரியா் பெயா் ஏதும் விடுபட்டிருப்பின் அவா் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணையின் நகலினை இணைத்து முதன்மைக் கல்வி அலுவலரின் விரிவான குறிப்புரையடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கடந்த ஆண்டுகளில் மாவட்டக் கல்வி அலுவலரின் பதவி உயா்வு, பணியிட மாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்திருந்தால் மீண்டும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடமிருந்து புதியதாக விருப்ப உரிமை பெற்று அளிக்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

சாா்ந்த தலைமை ஆசிரியரின் பணிப் பதிவேட்டினை ஆய்வு செய்து பரிந்துரை செய்யப்பட வேண்டும். பின் வரும் காலங்களில் புகாா் ஏதும் பெறப்பட்டால் பரிந்துரை செய்த மாவட்டக் கல்வி அலுவலா் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரே இதற்கு பொறுப்பேற்க நேரிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.