Cancer குறித்த விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 26, 2024

Cancer குறித்த விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!



Cancer குறித்த விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

Plastic Tiffen Box, Plastic Water Bottle போன்றவற்றை பயன்படுத்தினால் Cancer வரும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

அனுப்புநர்

திருமதி.க.சசிகலா,

இணை இயக்குநர்,

(நாட்டு நலப்பணித் திட்டம்),

பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6.

பெறுநர்

முதன்மைக்கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவலகம், அனைத்து மாவட்டங்கள்.

ந.க.எண்: 030374/எம்/இ2/2024 நாள்.(4.06.2024 பொருள்:

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடுத்து நிறுத்தக் கோருதல் மனு - தொடர்பாக.

பார்வை: 1. District Secretory, South Chennai, Consumer Confederation of India

'CCI' அலுவலக கடித நாள். 16.05.2024

2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கப்பள்ளி

இயக்குநரின் இணை செயல்முறைகள்

ந.க.எண்.079119/எம்/இ1/2023 நாள் 02.01.2024

3. Joint Proceeding of the State Project Director, Director of School

Education and Director of Elemetary Education Rc.No.1617/b8/Eco Club/SS/2024 Dated. 31.05.2024 ******

பார்வை 1-இல் காணும் கடிதத்தின்படி தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் உபயோகிக்கக் கூடாது என்று ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024- 2025 கல்வியாண்டு முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உபயோகிக்கும் டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டல் போன்றவற்றை பிளாஸ்டிக்கால் பயன்படுத்தக்கூடாது என்று அரசு உடனடியாக தடுத்து நிறுத்திட ஆணையிட வேண்டும் எனவும், பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டல் போன்றவைகள் மாணவ மாணவிகளுக்கு பல நோய்களை உருவாக்கக்கூடியதாவும் மேலும் கொடிய நோயான கேன்சர் வரக்கூடிய நிலையில் உள்ளதால் என் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது,

பள்ளிகள், பார்வை 2-ல் காணும் செயல்முறைகளின் படி அனைத்து அரசு தொடக்க நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தன்சுத்தம், பள்ளிவளாகத் தூய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், மறுசுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும் நடவடிக்கைகள், பள்ளிக்காய்கறி தோட்டம் அமைத்தல் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' என்ற திட்டத்தின் மூலமாக பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகளை மாணவர்களுக்கு அறிவுத்திட சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திலும் பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகள் வழியாக ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் நோய்கள் மன்றம் மூலமாக மாணவர்களுக்கு குறித்து விவரம் சுற்றுச்சூழல் தெரிவிக்கப்படுகிறது.

இப்பொருள் சார்ந்து கடித நகல் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு: பார்வை (1-3) கடித நகல்

Sto

பெறுதல்

District Secretory,

இணை இயக்குநர்

South Chennai,

Consumer Confederation of India 'CCI'

1006 .249

எண்.33, தனலட்சுமி நகர் 1 வது தெரு, நெற்குன்றம், சென்னை-600107.

ET042532861 IN

Consumer Confederation of India 'CCI'

(Apex Body of Consumer Organisation of India since 2001) CCI Govern under provision of Consumer Confederation a trust registered with Govt. of N.C.T. of Delhi, India

R.YOUSHUFCHIRAJ

DISTRICT SECRETORY, SOUTH CHENNAI DISTRICT

பெறுநர்

MobileNo.9361505115

030374

Email: chennaicci78@gmail.com

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்கள்

தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. உயர்திரு. கல்வித்துறை இயக்குனர் அவர்கள் பள்ளிக் கல்வித்துறை, டிபிஐ வளாகம், சென்னை - 600002.

மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.

நரள் : 16.5:2024



பொருள்: தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடுத்து நிறுத்தக் கோருதல் சார்ந்து மனு.

தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் உபயோகிக்கக்கூடாது என்று ஆணையிட்டுள்ளது. இந்நிலையில் 2024-25 கல்வியாண்டு முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உபயோகிக்கும் டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டல் போன்றவற்றை பிளாஸ்டிக்கால் பயன்படுத்தக்கூடாது என்று அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி ஆணையிட வேண்டுகிறோம். ஏனென்றால் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டல், பிளாஸ்டிக் டிபன்பாக்ஸ் போன்றவைகள் மாணவ மாணவிகளுக்கு பல நோய்களை உருவாக்கக்கூடியதாகும். மேலும் கொடிய நோயான கேன்சர் வரக்கூடிய அபாய நிலையும் உள்ளது. ஆகவே இதை கருத்திற்கொண்டு ஐயா அவர்கள் உடனடியாக இப்பொருள் மீது சிறப்புக்கவனம் செலுத்தி மாணவ மாணவிகளின் எதிர்கால வாழ்க்கையில் ஒளியேற்றிடவும், நோயற்ற தமிழகத்தை உருவாக்கிடவும் தங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,

(A. யூசுப் சிராஜ்)

எண்.33, தனலட்சுமி நகர் 1வது தெரு, நெற்குன்றம், சென்னை - 600 107. போன் : 93615 05115

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின்

இணைச் செயல்முறைகள், சென்னை-600 006

ந.க.எண். 079119/எம்/இ1/2023, நாள். 02.01.2024 பொருள்:

பள்ளிக் கல்வி - "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி"

- சிறப்பு பள்ளி

தூய்மை பணி செயல்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள்

முதல் 10.01.2024 வரை செயல்படுத்துதல்

08.01.2024

அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.

பார்வை: 1. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களின் நேர்முக கடிதம் எண். 10988/GL1(2)/2023

28.08.2023

நாள்.

2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்

ந.க.எண்.079119/எம்/இ1/2023, நாள்.02.01.2024.

அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தன்சுத்தம், பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், மறுசுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தினை உணர்தல், நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும் நடவடிக்கைகள், பள்ளி காய்கறித் தோட்டம் அமைத்தல் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் சிறப்பு செயல்பாடாக ஜனவரி மாதத்தில் 08.01.2024 முதல் 10.01.2024 வரை சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் மன்றம் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் எதிர்வரும் 08.01.2024. 09.01.2024, மற்றும் 10.01.2024 ஆகிய நாட்களில் பள்ளி வளாகத்தில் பின்வரும் தூய்மைப் பணி நடவடிக்கைகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பள்ளித் தூய்மைப்பணி நடவடிக்கைகள்

பள்ளிவளாகம் மற்றும் வகுப்பறைத் தூய்மை

> அனைத்து வகுப்பறைகளையும் தூய்மை செய்து கரும்பலகை பயன்படுத்தும் வண்ணம் இருப்பதை உறுதி செய்தல்.

> ஆசிரியர் அறைகள், ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் உட்பட்ட இதர அறைகளில் தேக்கமடைந்துள்ள தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்களை கழிவகற்றம் செய்தல்.

> பள்ளி அலுவலகம் மற்றும் தலைமையாசிரியர் அறையை முழுமையாக தூய்மை செய்தல்.

புதர்கள் மற்றும் களைச் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் மற்றும் பிற அறைகளில் உள்ள தளவாட பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்தல்.

காலை / மதிய / மதிய உணவு திட்டத்திற்கான சமையல் அறை நன்கு சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன், சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டு பயன்படுத்துதல் மற்றும் மாணவர்கள் உணவருந்தும் இடம் தூய்மையாகப் பராமரிக்கப்படுதல்.

> பள்ளி வளாகத்தில் நீர் தேங்காவண்ணம் சுற்றுப்புறம் மேடு பள்ளம் இன்றி சமப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளல்.

> அனைத்து வகுப்றைகளும் சுத்தம் செய்து, நன்றாக நீரால் தூய்மை செய்து பள்ளியில் உள்ள கட்டிடங்களும் வளாகமும் தூய்மையாக மிளிரச் செய்ய வேண்டும்.

> பள்ளி வளாகத்தில் சேரும் குப்பைகளை எக்காரணம் கொண்டும் எரித்தல் கூடாது.

> பள்ளி வளாகத்தில் சேரும் தேவையற்ற குப்பைகளை மேலாண்மை செய்தல். மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை இனம் பிரித்தல் மற்றும் மறுசுழற்சிக்காக உள்ளூர் நிர்வாகத்திடம் திடக் கழிவுகளை ஒப்படைத்தல்.

தாழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளை முறையாக தூய்மை செய்து பாதுகாப்பான முறையில் பயன்படுத்திட வேண்டும். நிதி ஆதாரம் > அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பள்ளி மான்யம் அல்லது பராமரிப்பு மான்யத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி காய்கறித் தோட்டம் ECO Club அமைத்திட வழங்கப்பட்டுள்ள நிதியின் ஒரு பகுதியினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தூய்மைப்பணிக்காக பணியாளர்களை நியமிக்கும் பொழுது நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை நிர்ணயித்து முதன்மை கல்வி அலுவலரால் ஆணை வழங்கப்பட வேண்டும்.

தொண்டு நோக்கில் தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பள்ளிப் பணியில் ஆர்வம் உள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் ஆகியோர் துணையுடன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

> உள்ளூர் நிர்வாகம் மற்றும் பிறத்துறைகளின் பணிகளை ஒருங்கிணைப்பு

செய்தல் மற்றும் சிறப்பு முயற்சிகள் மூலம் பணிகளை மேற்கொள்ளலாம். பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு நிதி (CSR Fund) பங்களிப்பு ஆகியனவற்றையும் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ளலாம். முன் ஆயத்த நடவடிக்கைகள்

> மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி இச்சிறப்பு பள்ளி தூய்மைப் பணியினை சிறப்பாக செயல்படுத்திட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

05.01.2024 அன்று அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் தூய்மை பணி சார்ந்து விவாதித்து உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

> "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்டத்தின் ஒரு பகுதியாக எதிர்வரும் 08.01.2024 முதல் 10.01.2024 நாட்களில் சிறப்பு செயல்பாடாக பள்ளி வளாகத் தூய்மைப் பணிகளை செயல்படுத்துவதற்கான ஏற்கனவே நடைமுறையிலுள்ள மாவட்ட, வட்டார மற்றும் பள்ளி அளவிலான குழுக்களின் கூட்டத்தினை நடத்தி உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

மாவட்ட அளவிளான நடத்தப்படவேண்டும்.

குழுக்கூட்டத்தினை 05.01.2024 அன்று சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகளை ஆசிரியர்கள், பெற்றோர்கள். மாணவர்கள், தன்னார்வளர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்கள் பங்கேற்போடு இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உரிய அலுவலர்களையும் மேலும், மாவட்டத்திலுள்ள பிற துறை சார்ந்த கண்காணித்திட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பள்ளிகள் நலன் சார்ந்து முன்னெடுக்கப்பட உள்ள சிறப்புத் தூய்மைப் பணியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கட்டிடப் பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் முன்னின்று ஒருங்கிணைத்து பள்ளிகளை பார்வையிட்டு சிறந்த நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்து அனைத்து அரசுப் பள்ளிகளையும் தூய்மையான மிளிரும் பள்ளிகளாக உருவாக்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு - பார்வை (1) கடிதம் நகல்.

பெறுநர்:

தொடக்க கல்வி இயக்குநர்

1. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்.

2. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி).

3. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை).

4. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்).

நகல்:

அரசுச் செயலர், பள்ளி கல்வித் துறை, அவர்களுக்குத் தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD DSE - Avoiding Plastic Things Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.