முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 25, 2024

முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு.



முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 03.07.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

21.07.2024 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள " தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்விற்கு " விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 21.06.2024 பிற்பகல் முதல் 26.06.2024 வரை பதிவேற்றம் செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டது . தற்போது இக்கால அவகாசம் 03.07.2024 வரை நீட்டிக்கப்படுகிறது .

என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து அதிக எண்ணிக்கையுள்ள மாணவர்கள் விண்ணப்பித்திட தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது CLICK HERE TO DOWNLOAD தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.