BRTE Transfer Counseling - Revised Instructions & DSE Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 7, 2024

BRTE Transfer Counseling - Revised Instructions & DSE Proceedings



ஆசிரியர் பயிற்றுநர்கள்(BRTE) பொது மாறுதல் கலந்தாய்வு (திருத்தியமைக்கப்பட்ட செயல்முறைகள்) அறிவிப்பு மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு - மாநில பணிமூப்பு முன்னுரிமைப் பட்டியல் படி மாநிலத்திற்குள் மாறுதல் - இந்த ஆண்டு மட்டும்!

BRTE Transfer Counseling - Revised Instructions & DSE Proceedings 👇 CLICK HERE TO DOWNLOAD PDF

BRTE - பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

2021-22ம் கல்வி ஆண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 500 நபர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் வழங்கப்பட வேண்டியவர்களை தவிர்த்து மற்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு ( zero counselling ) நடத்தப் பட வேண்டும் என பார்வை ( 1 ) ல் காண் அரசாணை எண் ( 1 டி ) 134 பள்ளிக் கல்வி ( ப.க .5 ( 1 ) த் துறை நாள் 18.08.2021 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்தப்பட்டு பணியிட மாறுதல் அளித்து ஆணை வழங்கப்பட்ட நிலையில் ஆசிரியர் பயிற்றுநர்களால் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட ரிட் மனு எண் : 27908/2023 மற்றும் தொகுப்பு வழக்குகளின் மீது 10.04.2024 ல் வழங்கப்பட்ட தீர்ப்பாணையில் மாறுதல் பெற்றவர்கள் 30.04.2024 வரை பழைய பணியிடத்தில் தொடரவும் . 07.06.2024 க்குள் புதிய பணியில் சேரவும் ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் மேற்காண் தீர்ப்பாணையினை எதிர்த்து பார்வை ( 3 ) ல் கண்டுள்ளவாறு ஆசிரியர் பயிற்றுநர்களால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு அம்மனு மீது 30.04.2024 நாளிட்ட தீர்ப்பாணை கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது .


ஆசிரியர் பயிற்றுநரகளுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6

ந.க.எண். 41779 / சி4 / இ1 / 2021 நாள். 06.06.2024

பொருள்

பார்வை: 1 -

பள்ளிக் கல்வி - 2024-25ம் ஆண்டு ஆசிரியர் பயிற்றுநர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜுன் 2024 மாதம் நடத்துதல் விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.

அரசாணை (1டி) எண். 134 பள்ளிக் கல்வி (பக5(1)) த் துறை நாள். 18.08.2021

2 சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட ரிட் மனு எண்.27908, 28620, 28655, 28709,முதல் 28715, 28723, 28736 முதல் 28740, 28770 முதல் 28796, மற்றும் 29050/2023 இன் மீது வழங்கப்பட்ட தீர்ப்பாணை நாள்.

சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட ரிட் மனு மீதான 10.04.2024 நாளிட்ட தீர்ப்பாணை மீது மேல்முறையீடு மனு எண் W.A(MD)No.842, 859 முதல் 864/2014 இடைக்கால தீர்ப்பாணை நாள். 30.04.2024.

அரசாணை (நிலை) எண்.176 பள்ளிக் கல்வி (பக 5 (1) துறை நாள்.17.12.2021

2021-22ம் கல்வி ஆண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 500 நபர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் வழங்கப்பட வேண்டியவர்களை தவிர்த்து மற்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு (zero counselling) நடத்தப் பட வேண்டும் என பார்வை (1)ல் காண் அரசாணை எண் (1டி) 134 பள்ளிக் கல்வி (ப.க.5(1)த் துறை நாள் 18.08.2021ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்தப்பட்டு பணியிட மாறுதல் அளித்து ஆணை வழங்கப்பட்ட நிலையில் ஆசிரியர் பயிற்றுநர்களால் சென்னை உயர் நீதிமன்ற நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட ரிட் மனு எண்.27908/2023 மற்றும் தொகுப்பு வழக்குகளின் மீது 10.04.2024ல் வழங்கப்பட்ட தீர்ப்பாணையில் மாறுதல் பெற்றவர்கள் 30.04.2024வரை பழைய பணியிடத்தில் தொடரவும், 07.06.2024க்குள் புதிய பணியில் சேரவும் ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் மேற்காண் தீர்ப்பாணையினை எதிர்த்து பார்வை(3)ல் கண்டுள்ளவாறு ஆசிரியர் பயிற்றுநர்களால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு அம்மனு மீது 30.04.2024 நாளிட்ட தீர்ப்பாணை கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது. (i) According to the learned Additional Advocate General, approximately, 725 vacancies in all 38 districts of the State of Tamil Nadu for the post of Block Resource Teacher Educator (BRTE) would be brought under general counselling to be undertaken in the month of May, 2024;

(ii) All the BRTES., would be eligible to participate in such counselling;

(iii) Insofar as the present appellants, who are the writ petitioners, are concerned, they have been working in the present stations. Because of the continuous

litigations, they will be able to retain in the same place till date.

(iv) However, such 105 vacancies, where these appellants are still retained, are also to be brought under counselling. Therefore, 725 vacancies approximately include

these 105 vacancies also.

(v) In view of the same, these BRTES., working in 105 stations will be immediately relieved by 30.04.2024 or 01.05.2024. In the transferred place, these 105 BRTES., should join and report.

(vi) Thereafter, these 105 BRTES., also can participate in the counselling to be conducted in the month of May, 2024 for the entire 725 vacancies.

(vii) Such a counselling shall be conducted based on the State-wide seniority, where the entire BRTES., would be taken into account for the purpose of maintaining the State-wide seniority and accordingly, counselling shall be conducted.

(viii) If a senior most person selects a place among the 725 vacancies, the moment he had selected, the place vacated by him is also to be shown as vacant for the purpose of the next man to choose, if he wishes. Like that, the counselling shall go on to fill up entire 725 vacancies.

2. If this arrangement is made, all the BRTES., who wish to have transfer through counselling for these 725 vacancies based on their inter se seniority Statewide, would get a chance to participate in the counselling and most of them may get such places by way of transfer, by thus, the grievance of the majority number of BRTES., would be redressed.

மேற்காண் தீர்ப்பாணையினை செயல்படுத்தும் பொருட்டு ஜுன் 2024ல் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதள வாயிலாக நடைபெறும் எனவும், அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியர் பயிற்றுநர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை

ஒவ்வொரு ஆசிரியர் பயிற்றுநரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும்போது EMIS இணையத்தில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login IDஐ பயன்படுத்தி EMIS வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது ஏதேனும் தங்கள் சார்பான விவரங்கள் தவறுதலாக இருப்பின் (பிறந்ததேதி, பணியில் சேர்ந்த நாள், தங்கள் பெயர், அலுவலகத்தின் பெயர் மற்றும் இதரவைகள்) அதிலிருந்து வெளியேறி தங்கள் அலுவலகத்திற்கென உள்ள Login IDயில் Teacher Profile சென்று தவறாக உள்ள விவரங்களை சரிசெய்யப்பட்ட பின்னர் மீளவும் தங்களுடைய Individual Login IDஐக்கு சென்று அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும். ஆசிரியர் பயிற்றுநரின் மாறுதல் விண்ணப்பத்தினை பெற்ற உதவி திட்ட அலுவலர் Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர் பயிற்றுநரின் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிடுதல்) செய்த பின்னர் முதல் கட்டமாக உதவி திட்ட அலுவலர் Approval செய்யப்படவேண்டும்.

மேற்படி உதவி திட்ட அலுவலர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்மந்தப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களின் விண்ணப்பத்தினை Approval செய்யப்பட்ட பின்னர் அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியர் பயிற்றுநருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியினை சம்மந்தப்பட்ட (CEO) முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும்.

வட்டார வள மையங்களில் பணிபுரியும் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களின் மாறுதல் விண்ணப்பத்தினை உதவி திட்ட அலுவலரால் ஒப்புதல் செய்யப்பட்ட பின்னர் இரண்டாம் கட்டமாக முதன்மைக் கல்வி அலுவலர் தங்களுக்கென ஒதுக்கீடு செய்ப்பட்ட Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர் பயிற்றுநர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்த பின்னர் இரண்டாம் கட்டமாக முதன்மைக் கல்வி அலுவலர் 2nd Approval செய்யப்படவேண்டும்.

மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை (Priority) கோரி விண்ணப்பிக்கும்போது அதற்கான உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை ஆவண நகல்) இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

தற்போது பணிபுரியும் வட்டார வள மையத்தில் மாறுதல் பெற்ற வகை (ஏற்கனவே பெற்ற மாறுதல் ஆணை இணைக்கப்படல் வேண்டும்) i)விருப்ப மாறுதல் ii)மனமொத்த மாறுதல் ii)நேரடி நியமனம் iv)பதவி உயர்வு v)நிருவாக மாறுதல் vi)அலகு மாறுதல் vi) பணிநிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

கலந்தாய்வு அட்டவணை

கலந்தாய்வு விவரம்

பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஆசிரியர் பயிற்றுநர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS)

வாயிலாகப் பதிவேற்றம் செய்தல்

கலந்தாய்வு நடைபெறும் நாள் 08.06.2024 காலை 06.00 மணி முதல் 10.06.2024 IT606 06.00 மணி வரை

பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதன்மைக் 11.06.2024 கல்வி அலுவலரால் ஒப்புதல் வழங்குதல் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர் 12.06.2024 பயிற்றுநர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List) மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) வெளியிடுதல்

முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் | 13.06.2024 ஏதும் இருப்பின் (Claims and objections) சரிசெய்தல் மற்றும் இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் (Release off seniority list) Release of Vacancy List Final)

பொதுமாறுதல் சார்பாக மேற்காண் அட்டவணைப்படி நடத்துதல் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான அறிவுரைகள்

மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த மாவட்டத் திட்ட அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்றுநர்களின் விண்ணப்பங்களை உதவி திட்ட அலுவலர் ஒப்புதல் (Approval) அளித்த பிறகு ஒரு பிரதியினை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர் பயிற்றுநர்களின் விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் (Approval) அளிக்க தங்களுக்கென EMIS மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட் User Name and Pasword ஐ பயன்படுத்தி ஆசிரியர் பயிற்றுநர்களின் மாறுதல் சார்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை சரிபார்த்து உறுதி செய்து ஒப்புதல் அளிக்கப்படவேண்டும்.

மாறுதல் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை (Priority) அடிப்படையில் விண்ணப்பத்தில் காரணம் குறிப்பிடும்போது அதற்குரிய சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலரால் சரிபார்த்திடல் வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி அனைத்துவகையான ஆசிரியர் பயிற்றுநர்களின் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை (Eligible Vacancy Only) CEO Login IDஐ பயன்படுத்தி EMIS இணையதளத்தில் அதற்கென உள்ள உரிய படிவத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

மேலும் காலிப்பணியிட விவரங்கள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டவுடன் பின்னர் சேர்க்கை / நீக்கம் / திருத்தங்கள் போன்றவைகளுக்கு இடமளிக்காமல் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் மாறுதலுக்கும் விண்ணப்பிக்கும் ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்மாவட்டம் / மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய இரு கலந்தாய்விற்கும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்கள் உள்மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.

மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகைபுரியாமலோ (Absent & Late) தாமதமாக வருகைபுரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.

மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர் பயிற்றுநர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்படின் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இணைப்பில் காணும் காலஅட்டவணையில் தெரிவித்துள்ளவாறு மாறுதல் கோரி விண்ணப்பிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களின் முன்னுரிமைப் பட்டியல் உரிய தேதியில் வெளியிடப்படும். அப்பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் அதனை EMIS Online வழியே உரிய விவரங்களை தெரிவித்திடவும், இதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் அலுவலகத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட EMIS Logind IDஐ பயன்படுத்தி மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர் பயிற்றுநர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திடவும் உரிய முறையீடுகள், திருத்தங்கள் இருப்பின் அதனை சரிசெய்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேற்படி திருத்தங்கள்/முறையீடுகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Final Seniority List & Vacancy List) வெளியிடப்பட்ட பிறகு திருத்தங்கள்/முறையீடுகள் ஏதும் இருப்பின் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு பதவி வாரியாக மேற்காண் காலஅட்டவணையின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வுகள் நடைபெறும். கலந்தாய்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் (கணினி, மின்இணைப்பு, இணையதளம், இருக்கை வசதி போன்ற இதர வசதிகளை) மேற்கொள்ளப்படவேண்டும். கலந்தாய்வுகள் நடைபெறும் அன்றைய நாளில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை சிறப்பாக நல்லமுறையில் நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேற்காண் விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட வட்டார வள மையங்களுக்கு சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

பள்ளிக் கல்வி இயக்குநர்

பெறுநர்

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் மூலமாக) CLICK HERE TO DOWNLOAD ஆசிரியர் பயிற்றுநரகளுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.