"போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம்" - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 5, 2024

"போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம்"

"போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம்"

அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு.

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்.19, 2024 முதல் மார்ச் 8, 2024 வரை போராட்டம் நடத்திய ஆசிரியர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு ஆசிரியர்கள் போராட்டம்.

"போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்"

19 நாள்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவு.


போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய உத்தரவு - DEO Proceedings Order to allow the days of participation in protest as leave without pay and record in the work register - DEO Proceedings

திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம் கல்விமாவட்டம் , வடமதுரை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டு தகவலின்றி பணிக்கு வருகை புரியாத நாள்களை ஈட்டிய விடுப்பாக அனுமதிக்க தெளிவுரை வேண்டி கருத்துரு பெறப்பட்டுள்ளது. கருத்துரு பரிசீலனை செய்யப்பட்டது. பார்வை 3 இல் காண் அரசுக்கடிதத்தில் தெரிவித்துள்ள படி மருத்துவ விடுப்பு தவிர பிற விடுப்புகள் அனுமதிக்கக்கூடாது என்பதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையை தற்போதைய நிலையில் ஏற்க இயலாது என வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.

அரசுக்கு எதிராக போராட்டத்தில் ( 19.02.2024 முதல் 08.03.2024 வரை ) கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் மேலும் 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகள் ஊதியத்தில் ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது . எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற கடிதங்கள் , தெளிவுரைகள் கேட்பதை தவிர்க்குமாறு வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது . CLICK HERE TO DOWNLOAD Strike Days EL request - DEO Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.