ஓய்வூதியப் பலன்களை 30 நாட்களுக்குள் பெற்று வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 26, 2024

ஓய்வூதியப் பலன்களை 30 நாட்களுக்குள் பெற்று வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



ஓய்வூதியப் பலன்களை 30 நாட்களுக்குள் பெற்று வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! Director of School Education orders to receive pension benefits within 30 days!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6,

ந.க.எண்.48853/அகத்தணிக்கை/2023-2, நாள். 26.04.2024

பொருள்- பள்ளிக் கல்வி - அகத்தணிக்கை அரசு / அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் இதர அலுவலகங்கள் - பள்ளி தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் - ஓய்வூதியப் பலன்கள் - 30 நாட்களுக்குள் விடுவித்தல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல்-சார்பு. பார்வை.

1 சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ஓ.மு.எண்.48853/அகத்தணிக்கை (நி.ஆ(ம) மு.க.அ) 2023-1, நாள் 28.09.2023

2 Gl6016060T-6 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

நாள் 31.01.2024

நி.மு.எண்.3858/அகத்தணிக்கை/2024-1 பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஓராண்டு கடந்த பின்னரும் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்படாமல் இருந்து வருவதாக தெரிய வருகின்றது.

எனவே, மேற்கண்ட காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும், உடனடியாக 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் பெற்று வழங்க சார்ந்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி செயல்பட தெரிவிக்கப்படுகிறது:- வழிகாட்டு நெறிமுறைகள்

1) பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுப்பெற்ற தலைமை தலைமை ஆசிரியரின் பணிக்காலத்திற்கு அகத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டு தணிக்கை அறிக்கை பெற்றிருக்கப்பட வேண்டும்.

2) தணிக்கை அறிக்கை பெற்ற நிலையில், ஓய்வுப் பெற்ற / ஓய்வு பெறவுள்ள தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் மீது தனிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கைத் தடை நிலுவை (Specific audit objection on wrong/excess salary received by concerned Headmaster Teacher or any misappropriation of Government funds by concerned Headmaster Teacher) ஏதுமில்லை என்ற நிலையில், ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்களும் பெற்று வழங்கப்பட வேண்டும்.

3) ஓய்வுப்பெற்ற சார்ந்த தலைமை ஆசிரியரின் பணிக்காலத்திற்கு உட்படாத முந்தைய அல்லது பிந்தைய பள்ளி சார்ந்த தணிக்கை தடைகளுக்காக தனியரின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைத்தல் கூடாது.

4) ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர்கள் சார்ந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில் எழுப்பப்பட்டுள்ள இதர (நிதி சாராத) தணிக்கைத் தடைகள் காரணமாக சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைத்தல் கூடாது.

5) ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர்கள் சார்ந்த பள்ளியில் பணம் பெற்று வழங்கும் அலுவலராக (Drawing and Disbursing Officer) பணிபுரிந்த காலத்தில், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மீது எழுப்பப்பட்டுள்ள நிதி சார்ந்த தணிக்கைத் தடைகள் ஏதேனும் இருப்பின், அதன் மீதும், கீழ்க்கண்ட நடைமுறைகளை உரிய ஆவணங்களுடன் உறுதிப்படுத்திய பின், தவறாது 30 நாட்களுக்குள் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்பட வேண்டும். அ) நிதி சார்ந்த, தணிக்கைத் தடைக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியரின் தணிக்கைத் தடை விபரம் சார்ந்த ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்படவேண்டும்.

ஆ) நிதி சார்ந்த தணிக்கைத் தடைக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாறுதலில் சென்றிருப்பின், தற்போது பணிபுரியும் பள்ளியில் பணிப்பதிவேட்டில் பதிவு மற்றும் என்பது உறுதி தொடர் செய்யப்படவேண்டும்.

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா இ) நிதி சார்ந்த தணிக்கைத் தடைக்கு உட்படுத்தப்பட்ட பணியாளர் நீதிமன்ற வழக்கு தொடுத்திருப்பின் அவை சார்ந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

எனவே, அகத்தணிக்கைத் தடை சார்ந்த இனங்களில் மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஓய்வுபெற்ற அனைத்து தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கு 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்களும் பெற்று வழங்க அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் மீது பிற இனங்களில் (Disciplinary action / Government Dues) நிலுவை ஏதேனும் இருப்பின் அதனடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.



பெறுநர்

1. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக் கல்வி பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை) CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.