அரசுப் பள்ளிகளில் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோருதல் - Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 17, 2024

அரசுப் பள்ளிகளில் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோருதல் - Proceedings



அரசுப் பள்ளிகளில் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோருதல் - Proceedings Request for details of Intermediate and Graduate Teachers who passed TET Examination in Government Schools - Proceedings

2012 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET முதல் தாள் மற்றும் TET இரண்டாம் தாள்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று வழிவகுக்கப்பட்டுள்ளது. எனவே 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று இடைநிலை ஆசிரியராகவும் மற்றும் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் எவரும் விடுபடாமல் பணிப்பதிவேட்டினை ஒப்பிட்டு சரிபார்த்தும், மற்றும் 2012 ஆம் ஆண்டிற்கு முன்பாக நியமனம் பெற்று தற்பொழுது பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் எவரேனும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருப்பின்

அவ்வாசிரியர்களின் பெயர்களையும் பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரிபார்த்து கொடுக்கப்பட்ட படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து காலதாமதத்தை தவிர்த்து, சுனக்கமின்றி செயல்பட்டு. 15,03.2024 -க்குள் தனிநபர் மூலம் உடன் அனுப்பி வைத்திடவும் மேலும் காலதாமதம் ஏற்படின் சம்மந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.