6-9 வகுப்புகளுக்கு மார்ச் மாதத்திற்கான மதிப்பீடு சார்ந்த வினாடி வினா - உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் & பள்ளிக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 9, 2024

6-9 வகுப்புகளுக்கு மார்ச் மாதத்திற்கான மதிப்பீடு சார்ந்த வினாடி வினா - உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் & பள்ளிக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!



6-9 வகுப்புகளுக்கு மார்ச் மாதத்திற்கான மதிப்பீடு சார்ந்த வினாடி வினா - உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் & பள்ளிக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்! Assessment Quiz for March for Grades 6-9 – State Program Director & Director of School Education Collaborative Processes Based on Conducting High Tech Lab!

மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் இணைச் செயல்முறைகள், சென்னை-06

ந.க.எண். R.C.No.3375/A4/Assessment/SS/2023

நாள். 08.03.2024

பொருள்:

பள்ளிக் கல்வி - மாநில மதிப்பீட்டு புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் 9 வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல், வழிகாட்டி நெறிமுறைகள் - சார்ந்து.
பார்வை:

பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் அவர்களின் கூட்டக்குறிப்பு நாள்: 28.06.2023

2. G.O. (Ms) No.155, School Education (ERT) Department, dated 16.11.2021

தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான "மாநில மதிப்பீட்டுப் புலம்" பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பார்வையில் காணும் கூட்டக்குறிப்புகளில் கூறப்பட்டுள்ளவாறு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கணினி வழி வினாடி வினா நடத்துதல் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் இணைப்பு - 1 இல் உள்ளவாறு 12.03.2024 முதல் படிப்படியாக 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்வுகளை நடத்த வேண்டும்.

உயர் அரசுப் 2. இந்த வினாடி வினா நிகழ்வை உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் நடத்த வேண்டும்.

3. உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் குறைபாடுகள். வினாத்தாள்களை உருவாக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

உள்ள 4. உயர்தொழில் நுட்ப ஆய்வகம் அமைந்துள்ள பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் இணைப்பு 2 இல் உள்ள வழிமுறைகளில் புலமை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

5. உயர்தொழில்நுட்ப ஆய்வகம் வழியாக தொடர்ச்சியாக வினாடி வினா நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை செயல்படுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

இயக்குநர் பள்ளிக் கல்வித்துறை மாநிலத் திட்ட இயக்குநர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைப்பு - 2

வழிகாட்டு நெறிமுறைகள்


உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி வினாடி வினா மதிப்பீடுகள்

நடைபெறுவதற்குத் தேவையான ஆயத்தப் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகள் தோறும் மதிப்பீடுகள் நடைபெறுவது தொடர்பான விவரங்களை உடனுக்குடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதிப்பீடு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உயர்தொழில்நுட்ப ஆய்வகம் (DC Assessment and DC HiTech Lab):

. உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் வினாடி வினா மதிப்பீடு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

உயர்தொழில் நுட்ப ஆய்வகத்தில் ஹார்ட்வர்(Hardware] அல்லது இன்டர்நெட் குறைகள் இருப்பின் Field Engineer உ தவியுடன் அதை சரி செய்ய வேண்டும்.

உங்களுடன் பகிரப்பட்டுள்ள டாஷ்போர்டு (Dashboard) ஐ பயன்படுத்தி உங்கள் மாவட்டத்தின் வினாடி வினா மதிப்பீட்டின் நிலையை கண்காணிக்க வேண்டும்.

• மதிப்பீடு நிலையை கவனிக்கவும், அதற்கான திட்டமிடலிலும், பள்ளிகளுக்கு சென்று வினாடி வினா மதிப்பீடு நடைபெறுவதை உறுதிப்படுத்தவும், நீங்கள் TNEF. Assessment Fellow.வைப் பயன்படுத்த வேண்டும்.

TNEF -Assessment Fellow:

மதிப்பீட்டை முடிப்பதில் சிரமம் உள்ள பள்ளிகளை அடையாளம் காண மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு உதவுங்கள். தலைமையாசிரியர்:

உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் சர்வர் கணினியை எப்பொழுதும் ON செய்து வைத்திருக்க வேண்டும்.

உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வினாத்தாள் உருவாக்குதல் நிகழ்வு வினாடி வினா மதிப்பீடு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாகவே முடிக்கப்படுவதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.

வினாடி வினா மதிப்பீடு கால அட்டவணை அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துங்கள்.

தலைமை ஆசிரியர் வினாத்தாள் உருவாக்குதல் நிகழ்வு நடைபெற்றதையும், மாணவர்களுக்கு மதிப்பீடு வினாடி வினா நடைபெற்றதையும் DC மற்றும் CEO அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

இணைப்பு 1-இல் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி வினாடி வினாவிற்கான நிகழ்வுகள்[Event Creation] மதிப்பீட்டுப் புலத்தால்(Assessment Cell] உருவாக்கப்படும்.

எனவே ஆசிரியர்கள் எந்த ஒரு நிகழ்வுகளையும்[Event Creation]உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வகுப்பாசிரியர்:

பிற பாட ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து வகுப்பாசிரியர் மட்டுமே வினாத்தாள் உருவாக்கும் நிகழ்வை மேற்கொள்ள வேண்டும்.

வினாத்தாள் உருவாக்கிய பின்னர் மாற்ற இயலாது என்பதால் மிகக் கவனமுடன் வினாத்தாள் உருவாக்கும் நிகழ்வை மேற்கொள்ள வேண்டும்.

உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஏற்படும் ஐயங்களையும் குறைகளையும் போக்க 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

வினாடி வினா மதிப்பீடு முடிந்த பிறகு விடைத்தாளை லோக்கல் சர்வர்இல் ஆசிரியர் டாஷ்போர்டில் இருந்து பதிவிறக்கம் செய்து வகுப்பில் மாணவர்களுடன் விவாதியுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை வினாத்தாள் உருவாகும் [QP allocation பணிக்கு பயன்படுத்துங்கள்.

பள்ளி:

UDISE Code:

வகுப்பு:

வினாடி வினா மதிப்பீடு வினாத்தாள் உருவாக்கம்

பாடம்

வினாடி வினா மதிப்பீட்டிற்கான பகுதி

பாட ஆசிரியரின் கையொப்பம்

வகுப்பு ஆசிரியர் கையொப்பம்

தலைமை ஆசிரியர் கையொப்பம் CLICK HERE இணைச் செயல்முறைகள் DSE - Hitech Lab Quiz PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.