6,7,8 வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வு - வினாத்தாள் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 22, 2024

6,7,8 வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வு - வினாத்தாள் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.



6th, 7th, 8th Annual Examination - Question Paper Guidelines issued by the Director of Elementary Education. 6,7,8 வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வு - வினாத்தாள் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

6,7,8 வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வு - வினாத்தாள் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தமிழ்நாடு தொடக்கக்கல் இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்...

printer- க்கு தேவைப்படும் paper donor செலவுக்கு பள்ளி தலைமையாசிரியர் அவர்களின் வங்கி கணக்கில் தொகை செலுத்தப்படும் .. 2023 - 2024ஆம் கல்வி ஆண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 6 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்விற்கான வினாத்தாட்கள் பதிவிறக்கம் செய்வது தொடர்பாகக் கீழ்க்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

1. இந்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.

2. தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் தேர்வு நாள் மதியம் 1.00 மணி வரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் வினாத் தாள்களைப் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

3. வினாத்தாட்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

4. தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாட்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும். 5. அனைத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் இணைப்பில் உள்ள வழிமுறைகளை தெளிவாக அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

6. அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் வினாத்தாட்கள் பதிவிறக்கம் செய்து பள்ளியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பிரிண்டர்களின் மூலம் பிரதி எடுத்துக் கொள்வதற்குத் தேவையான Paper & Tonnerக்கு ஆகும் செலவினத் தொகை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதியில் இருந்து வழங்கும் வகையில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) வழங்கப்பட்டு உள்ளது.

அனைத்து தலைமையிட மாவட்டக் கல்வி அலுவலர்களும் கால தாமதமின்றி இத்தொகையினை நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் வங்கி கணக்கிற்கு மின்னணு பரிமாற்றம் (NEFT / RTGS) மூலம் விடுவித்திட வேண்டும். (SNA வங்கிக் கணக்குத் தவிர்த்து)

மேற்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆண்டுத் தேர்வுகளை சிறப்பாக நடத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைப்பு: வழிகாட்டு நெறிமுறைகள்

பெறுநர்

மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), அனைத்து மாவட்டம். CLICK HERE TO DOWNLOAD வினாத்தாள் வழிகாட்டு நெறிமுறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.