தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள் 2024 - 2025 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 18, 2024

தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள் 2024 - 2025



தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள்



“ரூ.1,100 கோடி மதிப்பில் கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா மைக்கப்டும்;

கல்லணை கால்வாயை நீட்டித்தல் மற்றும் புனரமைப்பதற்கு ரூ.400 கோடி மதிப்பில் 2ம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.”

“மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு ரூ.843 கோடி ஒதுக்கீடு;

இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் மருத்துவ செலவுத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்;

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு நீர் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்”

“குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.1,557 கோடி ஒதுக்கீடு”



அரசு பள்ளிகளில் 6-12 வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ₹1000 உதவித்தொகை! “அரசுசார் இணைய வழி சேவைகளை மேலும் துரிதமாகக் கொண்டு செல்ல, எல்காட் ரூ.200 கோடி மதிப்பீட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும்;

1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும்”

“தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன; இதன்மூலம் 13,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்” 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்படும் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

₹300 கோடி மதிப்பீட்டில் 15000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும்!

அரசு பள்ளிகளில் 6-12 வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ₹1000 உதவித்தொகை!

உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் மலைப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும்

“உண்டு உறைவிட மாதிரி பள்ளிகளில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு;

இல்லம் தேடி கல்வி திட்டம் 2ம் கட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு”

“உண்டு உறைவிட மாதிரி பள்ளிகளில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு;

இல்லம் தேடி கல்வி திட்டம் 2ம் கட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு”

பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும் ▪️ இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு

▪️ பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு

“க.அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி பள்ளி கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு”

“மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவசப் பேருந்து திட்டம் தொடங்க ரூ. 3,050 கோடி நிதி ஒதுக்கீடு”

வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்

▪️ சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க ₹500 கோடி ஒதுக்கீடு

▪️ நாமக்கல்லில் ₹358 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹600 கோடி ஒதுக்கீடு

“அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும்” அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

2030க்குள் குடிசையில்லாத் தமிழ்நாடு, கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

2023ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்; கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டல்

ரூ.1,000 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்: தங்கம் தென்னரசு

"பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு;

5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு" சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் புதிய சிப்காட் பூங்கா ₹120 கோடியில் அமைக்கப்படும்

▪️ விருதுநகர், சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்

▪️ குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்

▪️ மதுரையில் 25,00 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும்

▪️ சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ₹300 கோடி ஒதுக்கீடு

▪️ சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு

▪️ வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ₹1000 கோடி ஒதுக்கீடு

“மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு;

கிராமப் பகுதிகளில் சாலை திட்டப்பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு”

முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம்

▪️ நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி “2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு;

ரூ.3,500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும்”

"2000 கி.மீ அளவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு;

2030-க்குள் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்"

சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ₹2 கோடி ஒதுக்கீடு!

சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ₹2 கோடி ஒதுக்கீடு

▪️ அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்

▪️ தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ₹5 கோடி ஒதுக்கீடு

▪️ முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்

▪️ ₹65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்

▪️ 2023ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்; கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டல் ▪️ கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

“விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500கோடி ஒதுக்கீடு;

தமிழ் இணைய மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு”

கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்

▪️ கீழடியில் திறந்தவெளி அரங்கு ₹17 கோடி செலவில் அமைக்கப்படும்

▪️ சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்

- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.