அரசாணை 243 ஆசிரியர்கள் மத்தியில் 90% நண்றியுணர்வு பாராட்டும் ஆசிரியர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 7, 2024

அரசாணை 243 ஆசிரியர்கள் மத்தியில் 90% நண்றியுணர்வு பாராட்டும் ஆசிரியர்கள்

அரசாணை 243 ஆசிரியர்கள் மத்தியில் 90% நண்றியுணர்வு பாராட்டும் ஆசிரியர்கள்

தமிழக அரசு அரசாணை எண்:243 பள்ளிக்கல்வித்துறை நாள் 21.12.2023 உத்தரவு மூலம் தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயனளிக்கும் 90% ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கும் ஆசிரியர்கள் மத்தியில் நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறது. பொருக்கமுடியாத யாரோ சிலர் GO 243 ஐ அரசுக்கு எதிரானது ஆசிரியர்களுக்கு எதிரானது என்று பொய் பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறது. இதில் வேறு, மாவட்டத்தலைநகரில் கறுப்புப்பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த ஒரு மாயை ஏற்படுத்துகிறார்கள் ஆசிரியர்களுக்கு 90% சாதகமான Go 243 ஐ அநீதியும் அக்கிரமமும் அராஜகமும் என பொய்யாக கூறிவரும் சில அமைப்புக்கு கண்டனம் தெரிவியுங்கள். யாருக்காக இந்த பொய்யான திடீர் ஆர்ப்பாட்டத்தை செய்கிறீர்கள் என்று கேளுங்கள்??? இடைநிலை ஆசிரியருக்கான போராட்டமா?? அல்லது பட்டதாரி ஆசிரியருக்கான போராட்டமா?? அல்லது தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காண போராட்டமா???

இந்த 243 ஜீவோ வால் ஒரு இடைநிலை ஆசிரியர் தன் சொந்த மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பு அதைத் தடுக்கவா இந்த மாயையான போராட்டம்???

ஒரு பட்டதாரி ஆசிரியர் தன் சொந்த மாவட்டத்திற்கு செல்லக்கூடாது என்பதற்காக இந்த போராட்டமா???

2003 இல் இருந்து நடுநிலைப்பள்ளியில் 6 7 8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்ற ஆணை அன்று இடப்பட்டு பணியமர்த்தப்பட்டது அப்போது இந்த அமைப்புகள் என்ன செய்து கொண்டிருந்தது. அப்பொழுது இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்படவில்லையா??

90% சதம் ஆசிரியர்கள் வரவேற்கும் ஆணையை ரத்து செய் என ஒரு பொய்யான வதந்தியை செய்கிறார்கள்.

"ஏன் திடீரென்று மாயையான கண்டனம் என அறிவித்திருக்கும் தங்கள் அமைப்பில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர்களைப் பற்றி கவலை இல்லையா??* ஏன் இந்த அமைப்புகள் நடுநிலைஆக அரசாணை 243ஐ, யாருக்கும் பாதிக்காத அளவுக்கு திருத்தத்தை மேற்கொள்ள முயற்சி எடுக்கவில்லை யோசியுங்கள் தோழர்களே?? *ரத்து செய்ய வேண்டும் என்று மட்டுமே தானே போராடுகிறது??

மாயையாக போராட்டம் என கூறும் அமைப்புகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு துரோகம் இழைத்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊட்டு பதவியின் மூலம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக செல்வதற்கான போராட்டமா??

எத்தனையோ இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் , பதவி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் ,பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் பதவி இறக்கம் செய்யாமல் (243) சொந்த மாவட்டங்களுக்கு செல்லாமல் இருப்பதற்கு இந்த மாயையான போராட்டமா??

பொய்யான பிரச்சாரம் செய்து G.O.243 ஆசிரியருக்கு எதிரானது என பொய்யாக கூறிக் கொண்டிருக்கும் சில அமைப்புகளில் உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கு எதிராக இந்த மாய போராட்டமா?? 110-17 படி நடுநிலை தலைமையாசிரியர் பதவி இடைநிலை தலைமை ஆசிரியர்கள் தகுதி இல்லை எனக் கூறி பட்டதாரி தலைமை ஆசிரியர்களை நியமிக்க ஆணை வெளியிடப்பட்ட அப்போது அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காத இந்த ஆசிரியர் சங்கங்கள் அமைதி காத்தது ஏன்??

இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் எத்தனையோ பேர் பதவி உயர்வு பெறும் நிலையில் இருந்து, ஊட்டுப் பதவி ஆணை மூலம் மேலிருந்து கீழே பட்டதாரி ஆசிரியர் இறக்கப்பட்டதால் பதவி உயர்வை இழந்தனர். அப்போது இந்த அமைப்புகள் அன்று எங்கே சென்றன??

இன்று மாயையான பொய்யாக வந்ததையும் திடீர் கண்டனம் செய்யும் அமைப்புகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை பற்றி கவலை கொள்ளாமல் எதிர்ப்பு என கூறுவது அவர்களுக்கு துரோகம் செயல் அல்வா???

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.