11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு: தனித் தேர்வர் ஹால்டிக்கெட் பிப்.19-ல் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 15, 2024

11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு: தனித் தேர்வர் ஹால்டிக்கெட் பிப்.19-ல் வெளியீடு



11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு: தனித் தேர்வர் ஹால்டிக்கெட் பிப்.19-ல் வெளியீடு

தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு:தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 4 முதல் 25-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகளை எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்.19-ம்தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று தங்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பிளஸ் 1 (அரியர்), பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள்,

தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் தொடர்பான செய்திக் குறிப்பு

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.