மூடப்பட்ட கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெறுதல் - நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 30, 2024

மூடப்பட்ட கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெறுதல் - நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு



மூடப்பட்ட கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெறுதல் - நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு

சுருக்கம்

பொதுப் பணிகள் - 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் - வழிகாட்டுநெறிமுறைகள்-மூடப்பட்டகல்லூரிகள்- தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெறுதல் - நெறிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.

மனிதவள மேலாண்மை (எஸ்)த் துறை

அரசாணை (நிலை) எண்.01

நாள்: 02.01.2024. சோபகிருது, மார்கழி 17, திருவள்ளுவர் ஆண்டு 2054.

படிக்க:

2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம்.

2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் திருத்தச் சட்டம்.

அரசாணை (நிலை) எண்.82, மனித வள மேலாண்மை (எஸ்)த் துறை, நாள் 16.08.2021. ஆணை:

மேலே ஒன்றில் படிக்கப்பட்ட சட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணி நியமனங்களில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் இயற்றப்பட்டது. நேரடி நியமனத்திற்கான காலிப் பணியிடங்களில், இருபது விழுக்காடு பணியிடங்களை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கு அச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது.

2 மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் திருத்தச் சட்டத்தின்படி, குறிப்பிட்ட பதவிக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பணி விதிகளில், நேரடி நியமன முறைக்காக வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி வரை தமிழ் வழியில் பயின்றவர்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட 20 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் என்ற வகையில் உரிய

திருத்தங்கள்

மேற்கொள்ளப்பட்டன. அச்சட்டத்திருத்தத்தில் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது:-

(i) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது 10-ஆம் வகுப்பாக இருப்பின், 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்றிருக்க வேண்டும்;

(ii) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது மேல்நிலை வகுப்பாக (12-ஆம் வகுப்பு) இருப்பின், 10-ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்பினை தமிழ் வழிக் கல்வியில் பயின்றிருக்க வேண்டும்:

(iii) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது பட்டயப் படிப்பாக (Diploma) இருப்பின், 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பினை தமிழ் வழி கல்வியில் பயின்றிருக்க வேண்டும்; அல்லது, மேல்நிலை வகுப்பிற்குப் பின் பட்டயப் படிப்பினை முடித்திருந்தால், 10-ஆம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பினை தமிழ் வழிக் கல்வியில் பயின்றிருக்க வேண்டும்:

(iv) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது பட்டப் படிப்பாக இருப்பின், 10-ஆம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப் படிப்பினை தமிழ் வழி கல்வியில் பயின்றிருக்க வேண்டும்.

(v) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது முதுகலைப் பட்டப் படிப்பாக இருப்பின், 10-ஆம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு, பட்டப் படிப்பு மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பினை தமிழ் வழி கல்வியில் பயின்றிருக்க வேண்டும்.

3. இந்நிலையில், மேற்படி சட்டங்களை செயல்படுத்துவதில் பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் (W.P.(MD).No.8025 / 2020), 22.03.2021 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் பணி அடிப்படையில் முன்னுரிமையின் நியமனம் சட்டம் செய்தல் மற்றும் அச்சட்டத்திற்கான 2020-ஆம் ஆண்டு திருத்தச் சட்டம் ஆகியவை சட்டப்படி செல்லத்தக்கவையாகும் எனவும், ஒன்றாம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை முழுவதுமாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே அரசுப் பணியில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஆணையிட்டது. 4. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய மேற்படி தீர்ப்பினை செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கருத்தினை பெற்று அரசு விரிவாக ஆய்வு செய்து, அதன்படி, 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில்

கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்திற்கான 2020-ஆம் ஆண்டு திருத்தச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, அரசாணை (நிலை) எண்.82, மனிதவள மேலாண்மைத் துறை, நாள் 16.08.2021-ல் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதில் மற்றவற்றுக்கிடையே பத்தி 4 (vii)-ல் பின்வரும் வழிகாட்டு நெறிமுறையும் வெளியிடப்பட்டுள்ளது:-

(vii) பள்ளிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / உரிய அலுவலரிடமிருந்து தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வர்கள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்”.

5. இந்நிலையில், கல்லூரிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில் ஏற்கனவே அக்கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் யாரிடம் தமிழ்வழிச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற பொருண்மை மீது அரசு கவனமாக ஆய்வு செய்து, மேலே மூன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் தொடர்ச்சியாக பின்வரும் வழிகாட்டு நெறிமுறையையும் வெளியிட முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடுகிறது:-

“உயர்கல்வித் துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீன நலத்துறை, சட்டத்துறை ஆகியவற்றின் எல்லைக்குட்பட்ட கல்லூரிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், அக்கல்லூரிகள் ஏற்கனவே இணைவு பெற்றிருந்த பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்து தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை இவ்வாணையுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பெற்று, தேர்வர்கள் உரிய அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும்".

(ஆளுநரின் ஆணைப்படி)

சிவ் தாஸ் மீனா,

அரசு தலைமைச் செயலாளர், பல்கலைக்கழக அலுவலக முத்திரை

பல்கலைக்கழகங்களின் பதிவாளர் (அலைபேசி எண்.

* தேர்வர் வெவ்வேறான படிப்புகளை வெவ்வெறு கல்வி நிறுவனங்களில் நிறைவு செய்துள்ளார் எனில், தான் படிப்பினை நிறைவு செய்த ஒவ்வொரு கல்வி நிறுவன / பல்கலைக்கழக பதிவாளரிடமும் தனித்தனியாக இச்சான்றிதழைப் பெற வேண்டும்.

Certificate for having studied in Tamil Medium*

This is to certify that Thiru / Tmt / Selvi

(Name) had studied (Diploma / Degree / PG Degree, etc.) during the year instruction and had satisfactorily completed the course of studies prescribed for PG Degree, etc.)

to

with Tamil as the medium of (Diploma / Degree / Thiru / Tmt / Selvi

the Tamil medium.

(Name) was / was not awarded scholarship meant for students studying in This certificate is issued with reference to Section 2(d) of the PSTM (Amendment) Act, 2020, based on the verifilable documentary evidence. The undersigned assumes full responsibility for the veracity of the contents herein.

Place : Date :

Seal of the University

Signature of Registrar of Universities

(Mobile No

* If the candidate has completed different courses in different Educational Institutions, such a certificate shall be obtained from each of these Educational Institutions / Registrar of Universities for the courses completed therein.

சிவ் தாஸ் மீனா, அரசு தலைமைச் செயலாளர்.

//உண்மை நகல்//

CLICK HERE TO DOWNLOAD அரசாணை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.