TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 30, 2024

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை



Things to keep in mind while applying for TNPSC Group 4 Exam - TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

TNPSC குரூப் 4 தேர்வுக்கு

விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

Go to www.http://www.tnpscexams.in/

1. முதலில் ஒரு முறைப் பதிவில் தகவல் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும்

2. விண்ணபிக்கும் போது அறிவிக்கைக்கு பிந்தைய நாள் எடுத்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்

3. புதிய புகைப்படம் மற்றும் கையெழுத்தை டி என் பி எஸ் சி வழிமுறைகளின்படி பதிவேற்றம் செய்க

4. ஒரு முறைப்பதிவில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் டி என் பி எஸ் சிக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தால், போதிய ஆவணங்கள் அளித்தபின்பு மாற்றங்கள் 7 நாட்களுக்குள் சரிசெய்யப்படும்.



விண்ணபிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு சான்றிதழ்களை விண்ணப்பிக்கும் போது இரண்டு முறை சரிபார்த்த பின்பே விண்ணப்பத்தில் அத்தகவல்களை பதிவேற்றம் செய்க

சாதிச் சான்றிதழில் தவறு நிகழாத வண்ணம் கவனத்தில் கொள்க

தமிழ் வழியில் படித்தோர் அதற்கான சான்றிதழ்களை முறையான வடிவத்தில் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் (இத்தேர்வுக்கு 10 ஆம் வகுப்புவரை வாங்கினால் போதுமானது) விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் முறையான கவனம் செலுத்தி விண்ணபிக்க மேற்சொன்ன நான்கில் ஏதேனும் தவறு செய்தால், தேர்வின் எந்த நிலையிலும் நமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏன் முதலில் விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வர் இரண்டு பேர் ஒரே மதிப்பெண் பெற்றால் தரவரிசைப் பட்டியலில் முன்னுக்கு வர வாய்ப்புள்ளது.

ஒரெ மதிப்பெண் பெற்றிருக்கும் வேளையில் முதலில் இரண்டு தேர்வர்களின் அதிகபட்ச கல்வித் தகுதியைப் பெற்றிருப்பவர் தரவரிசைப் பட்டியலில் முன் இருப்பார்.

தேர்வர் இருவரும் அதே உச்ச பட்ச கல்வித் தகுதியைக் கொண்டிருந்தால் அடுத்து வயதில் யார் மூத்தவர் என்பதை வைத்து தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும்.

வயது மற்றும் கல்வித்தகுதியில் இருவரும் சம நிலையில் இருக்கும் போது யார் தேர்வுக்கு முதலில் விண்ணப்பித்தார்களோ அதை அடிப்படையாக வைத்து தரவரிசைப் பட்டியலில் முன் இடம் பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.