30.01.2024 ( செவ்வாய் கிழமை ) உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 19, 2024

30.01.2024 ( செவ்வாய் கிழமை ) உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.



30.01.2024 ( செவ்வாய் கிழமை ) உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இவ்வாண்டு 26.012024 முதல் 30.012024 வரை கொண்டாடப்படுவதை முன்னிட்டு எதிர்வரும் 30.012024 ( செவ்வாய் கிழமை ) அன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது . மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 - ம் தேதி ( 10.02.2024 ) சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் , பணி நாளாக அறிவிக்கப்படுகிறது . இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881 - ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணிகளுடன் இயங்கும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருதீபக் ஜேக்கப் , இஆப . தெரிவித்துள்ளார் . பார்வை 1.இல் காணும் அரசாணையின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாண்டு கொண்டாடப்படும் 177 ஆவது ஆராதனை விழாவை முன்னிட்டு 30.012024 அன்று செவ்வாய் கிழமை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 10.02.2024 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது.


மேற்படி உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான 30.012024 செவ்வாய் கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.