“டிசம்பர் 11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 7, 2023

“டிசம்பர் 11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!



4 மாவட்டங்களில் 11ம் தேதி பள்ளிகள் திறப்பு.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 11ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக தூய்மை, மின் இணைப்பு உள்ளிட்ட உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை.

“டிசம்பர் 11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒவ்வொரு நாளாக தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து வந்தது. இதனை தொடர்ந்து, டிசம்பர் 11 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில்,

மிக்ஜான் புயல் விடுமுறைக்குப் பின் பள்ளிகள் 11.12.2023 அன்று பள்ளிகள் திறக்கப்படும். மேலும், பள்ளிகள் திறப்பதற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாக துாய்மைப் பணி மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு NSS, JRC, Scout, NCC, NGC உள்ளிட்ட அமைப்புகள், முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சிப் பிரதிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களது கூட்டு முயற்சியில் சரி செய்ய வேண்டும்.

மேலும், அனைத்து பள்ளிகளும் 11.12.2023 முதல் முழுமையாக செயல்படவும், அரையாண்டுத் தேர்வுகளை எவ்வித புகார்களுக்கு இடம் தராமல் திட்டமிட்டு நடத்திடவும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.