2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 24, 2023

2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!



The Joint Director of School Education has issued a general work schedule order to the teachers appointed as Computer Instructor Level-1 in 2021 and 2022 from the day of joining! - 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர்(மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள், சென்னை-06.

क्र.क्र.ना. 64890/L3/3/2022, बी. 20.11.2023

பொருள்-

பள்ளிக்கல்வி தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி பணிவரன்முறை 2019-2020ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டமை - கணினி பயிற்றுநர் நிலை-1 ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குவது - தொடர்பாக.

பார்வை-

1. சென்னை-6.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலரின் 64. gù, H.6. ώτ. 8019/6/2018, नं. 30.12.2020

2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள்,ந.க.எண்.8101/வி1/இ2/2019 नं. 0201.2021

3. தமிழ்நாடு மேல்நிலை கல்விப்பணி சிறப்பு விதிகள் வெளியிடப்பட்டுள்ள (அரசிதழ் எண்.36, நாள்.30.01.2020) அரசாணை(நிலை) எண்.14, பள்ளிக் கல்வித் துறை, नं. 30.01.2020 2019-2020 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் நிலை-1 ஆசிரியர் பணியிடங்களுக்கு பார்வை 1-ல் காணும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பார்வை 2-ல் காணும் இவ்வாணையரக செயல்முறைகள் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சார்ந்த கணினி பயிற்றுநர் நிலை-1 ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கலாகிறது.

சார்ந்த கணினி பயிற்றுநர் நிலை-1 ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்கும் அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் என்பதால், அனைத்து கல்வித் தகுதிச் சான்றுகள் உண்மைத் தன்மை சரிப்பார்த்து பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான ஆணை வழங்கப்பட வேண்டும். இச்செயல்முறைகளின் நகல்களை தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள மேல்நிலைப் பள்ளித் தலைமையாசியர்களுக்கு அனுப்பி வைப்பதோடு சார்ந்த கணினி பயிற்றுநர் நிலை-1 ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிக்கல்வி மேல்நிலைக் கல்வி 2020-21 5 2022- 2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை-1 UITL ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் - பணிநியமன ஆணை அளிக்கப்பட்டமை கணினி பயிற்றுநர் நிலை-1 பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் - சார்பு

2 :-

1) சென்னை -6, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியக் கடிதம் 5.Θ.στσστ. 6788 /E2/S1/2022 π. 12.10.2022

2) சென்னை -6. பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி ) அவர்களின் செயல்முறைகள் 15.6.στσσστ 276 / Lपना 3/23/2022 नं. 14.10.2022

2020-2021 முதல் 2022-2023 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் நிலை-1 பாட ஆசிரியர் பணியிடங்களுக்கு பார்வை-1ல் காணும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பார்வை-2ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சார்ந்த கணினி பயிற்றுநர் நிலை-1 பாட ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கலாகிறது. சார்ந்த கணினி பயிற்றுநர் நிலை-1 பாட ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்கும் அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் என்பதால், அனைத்து கல்வித் தகுதிச் சான்றுகள் உண்மைத்தன்மை சரிபார்த்து பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான ஆணை வழங்கப்பட வேண்டும்.

இச்செயல்முறைகளின் நகல்களை தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைப்பதோடு சார்ந்த கணினி பயிற்றுநர் நிலை-1 பாட ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கோள்ளும்படி சம்மந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.