CPS ஒழிப்பு இயக்கம் நான்கு கட்ட போராட்டம்; 2024 பிப். 8 முதல்வர் வீடு முற்றுகை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 14, 2023

CPS ஒழிப்பு இயக்கம் நான்கு கட்ட போராட்டம்; 2024 பிப். 8 முதல்வர் வீடு முற்றுகை



சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் நான்கு கட்ட போராட்டம்; 2024 பிப். 8 முதல்வர் வீடு முற்றுகை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் நான்கு கட்ட போராட்டம் அறிவித்துள்ள சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் 2024 பிப்., 8 ல் முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட உள்ளது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு 2003 ஏப்., 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 6.50 லட்சம் பேர் பணியில் சேர்ந்துள்ளனர். இதில் ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர்கள் என 35 ஆயிரம் பேர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கு (ஒரு முறை) செட்டில்மென்ட் மட்டும் தான். மற்றபடி ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படுவதில்லை.

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து போராடி வருகிறது.

இயக்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பிரெடெரிக் ஏங்கல்ஸ், செல்வகுமார், ஜெயராஜராஜேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற கோரி டிச., 2 ல் மாவட்ட தலை நகரங்களில் குடும்பத்தினருடன் பட்டினி போராட்டம், டிச., 27 ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல், 2024 ஜன., 21, 22 ல் தற்செயல் விடுப்பு, பிப்., 8 ல் சென்னை முதல்வர் ஸ்டாலின் வீடு முற்றுகை போராட்டங்களில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது:

தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 100 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டு வருகிறார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் அதன் விளைவுகள் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.

1 comment:

  1. நல்லா அழுத்தம் கொடுங்க.... பிதுங்காம.... 😆😊😆

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.