BT Teachers Promotion Panel | பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரிக்க உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 25, 2023

BT Teachers Promotion Panel | பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரிக்க உத்தரவு



ஆதிதிராவிடர் நலத்துறை - 01.03.2022 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர் காப்பாளர் பதவி உயர்வு வழங்க பாட வாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் அனுப்ப உத்தரவு. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் / விடுதிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / பட்டதாரி காப்பாளர்களுக்கு பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க 01.03.2022 அன்றைய நிலையில் இடைநிலை ஆசிரியர் / தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை காப்பாளர்கள் நிலையில் ஒருங்கிணைந்த மற்றும் பாட வரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் மற்றும் இறுதி பணிமூப்பு பட்டியல், இறுதி தேர்ந்தோர் பெயர் பட்டியல் விவரத்தினை அனுப்புமாறு, அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு பார்வை-1இல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை இனியும் காலம் தாழ்த்தாமல் உடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. 01.03.2022 அன்றைய நிலையில் ஒருங்கிணைந்த மற்றும் பாடவாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் மற்றும் இறுதி பணிமூப்பு பட்டியல் தயார் செய்து அனைத்து ஆசிரியர்கள் அறியும் வண்ணம் தகவல் பலகையில் விளம்பரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

2. 01.03.2022 அன்றைய நிலையில் ஒருங்கிணைந்த மற்றும் பாடவாரியான பணிமூப்பு பட்டியலினை அனைத்து பள்ளிகளுக்கு சுற்றுக்கு அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு சார்வு செய்து கையொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.

3. மேற்கண்ட தற்காலிக ஒருங்கிணைந்த மற்றும் பாடவாரியான பணிமூப்புப் பட்டியலில் ஆட்சேபணைகள் ஏதும் வரும் பட்சத்தில் உரிய ஆவணங்களின்படி திருத்தங்கள் மேற்கொண்டு இறுதி பணிமுப்பு பட்டியல் வெளியிட்டு அதனடிப்படையில் இறுதி தேர்ந்தோர் பெயர் பட்டியல் பாடவாரியாக (ஒரு காலிப்பணியிடத்திற்கு 2 நபர்கள் வீதம் கணிக்கிட்டு) தயார் செய்து இறுதி செய்யப்பட்டு இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்: 4. மேற்கண்ட ஒருங்கிணைந்த மற்றும் பாடவாரியான இறுதி பணிமூப்பு பட்டியலில் ஏற்படும் தவறுதலுக்கு தாங்களே முழுபொறுப்பேற்க நேரிடும் எனவும் இதன்முலம் தெரிவிக்கப்படுகிறது.

5. மேற்கண்ட பாடவாரியான இறுதி பணிமூப்பு பட்டியலின் பாடவாரியான இறுதி தேர்ந்தோர் பெயர் பட்டியல் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

6. இறுதி தேர்ந்தோர் பெயர் பட்டியலில் இடம் பெற்றவர்களது பெயரில் ஒழுங்கு நடவடிக்கை இனங்கள் நிலுவை குறித்தும், தண்டனைகள் ஏதும் இருப்பின் அவ்விவரங்களையும் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட பணிமுப்பு பட்டியல்களில் தவறுகள் ஏதும் ஏற்படின் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.