எங்கும் தமிழ், எதிலும் தமிழ் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வெளியிடப்பட்ட அரசாணையைப் பின்பற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 9, 2023

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வெளியிடப்பட்ட அரசாணையைப் பின்பற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.



Director of School Education orders to follow the ordinance issued to implement Tamil everywhere, Tamil in anything scheme. - எங்கும் தமிழ், எதிலும் தமிழ் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வெளியிடப்பட்ட அரசாணையைப் பின்பற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

இணைப்பு: தமிழ் வளர்ச்சித் துறையின் அரசாணை!

DSE - G.O.47 Reg Tamil Valarchi Dept

தமிழ் வளர்ச்சித்துறை - சட்டமன்ற கூட்டத் தொடர் - ஆளுநர் அவர்களால் ஆற்றிய உரையினை நடைமுறைப்படுத்திட அரசாணை வெளியிடப்பெற்றுள்ளமை அரசாணையினை நடைமுறைப்படுத்திட அறிவுறுத்தல்கள் - சார்ந்து. பார்வை 2ல் காணும் தமிழ் வளர்ச்சி இயக்குநரவர்களின் கடிதம் மற்றும் அத்துடன் இணைத்து பெறப்பட்ட பார்வை 1ல் காணும் அரசாணை, அவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி செயல்படும் பொருட்டு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.

இணைப்பு: பார்வை(1)ல் காணும் அரசாணையின் நகல்.

தமிழ் வளர்ச்சி - 2022-2023ஆம் ஆண்டுக்கான மேதகு ஆளுநர் அறிவிப்பு "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" திட்டம் தமிழ்மொழி / தமிழ்மொழித்திட்டம் / தமிழ் ஆட்சிமொழி சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஆணை மற்றும் கடிதங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட அறிவுறுத்தங்கள் மற்றும் கூடுதல் அறிவுறுத்தங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை:

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட 2022-2023-ஆம் ஆண்டுக்கான மேதகு ஆளுநர் உரையில் "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற திட்டத்தை அரசு அமைப்புக்கள், தனியார் பள்ளிகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் நடைமுறைப்படுத்த ஏதுவாக உரிய வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ் நாடு ஆட்சி மொழிச்சட்டம் 1956-இல் உருவாக்கப்படும்." என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட தமிழ் வளர்ச்சி இயக்குநரின் கடிதத்தில், தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு பல்வேறு துறைகள் வாயிலாக அரசாணைகள், கடிதங்கள் வாயிலாக பல்வேறு அறிவுறுத்தங்கள் அரசு அமைப்புகள் தனியார் அமைப்புகள் செயல்படுத்தும் பொருட்டு வெளியிடப்பட்டு வருகிறது என்றும், அவ்வகையில் ஆட்சி மொழி திட்டம் மற்றும் அது தொடர்பான பணிகள் கீழ்கண்டவாறு தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்:-

i) தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956-இல் இயற்றப்பட்டு அதன்படி

தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் மொழி இருந்து வருகிறது.

ii) மேற்படி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" என்ற உயரிய இலக்கை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் வளர்ச்சி தொடர்புடைய திட்டங்களை மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகம் / தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்களில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் செம்மையுற செயற்படுத்தவும் மற்றும் அவர்களின் பயன்பாட்டிற்கும், மேலும் பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் பயன்படுத்த ஏதுவாக பல்வேறு துறைகள் வாயிலாக அரசாணைகள், கடிதங்கள் மற்றும் குறிப்புரைகள் (ம) அறிவுரைகள் வாயிலாகத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆட்சிமொழித் திட்டப் பயிற்சிகள். கருத்தரங்குகள். ஆய்வுகள், ஆட்சிசொல் அகராதி உருவாக்கும் தொடர்பணிகள் முதலியன தமிழ் வளர்ச்சித் துறை, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆட்சிமொழித் திட்டத்தை செம்மையாக செயல்படுத்தும் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. iv) தமிழ் கணினிப் பயன்பாட்டில் "தமிழ் ஒருங்குறி" எழுத்துரு பயன்படுத்த வேண்டும் என தொழில்நுட்ப துறையால் ஆணை வெளியிடப்பட்டு அதனை அனைத்து அரசு அலுவலகங்களும் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு தமிழ்மொழி மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி, கலைச்சொல் உருவாக்குதல், இலக்கியத் திறன் போட்டிகள். மாணவர்களுக்கான அகராதியியல் விழிப்புணர்வுத் திட்டம், சொற்குவை, மாணவர் தூதுவர் பயிற்சித் திட்டம் மற்றும் திருக்குறள் முற்றோதல் முதலிய திட்டங்கள் தமிழ் வளர்ச்சி மற்றும் அகர முதலி திட்ட இயக்ககம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அயல் மாநிலங்கள் மற்றும் உலகளவில் தமிழ்மொழியை பரப்பும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், தெரிவு செய்யப்பட்ட பிறமாநில பல்கலைக்கழகங்களில் தமிழில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் பேராசிரியர் நியமனங்களுக்கு அரசின் சார்பாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல், பிறநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில், தமிழ் இருக்கைகள் அமைக்க அரசின் நல்கைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர் நலத்துறையால் கடைகள் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகைகள் 5:3:2 என்ற விகிதத்தில் அமைவது குறித்து உரிய ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ் வளர்ச்சித் துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகள் வாயிலாக தமிழ்மொழி மற்றும் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் தொடர்பாக பல்வேறு அரசாணைகள் / அறிவுறுத்தல்கள் வாயிலாக பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மேற்படி திட்டங்களில் குறிப்பிடப்பட்ட விவரங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு வழிகாட்டுதல் நாளிதுவரை வெளியிடப்படவில்லை.

3. எனவே, ஆட்சிமொழி திட்டம் தொடர்பாக அரசு அமைப்புகள் மட்டுமின்றி தனியார் அமைப்புகள், தனியார் கடைகள். பள்ளிகள் முதலியன தொடர்பாக ஏற்கனவே அரசு கடிதங்கள் ஆணைகள் வாயிலாக வாயிலாக வெளியிடப்பட்ட அறிவுறுத்தங்களுடன் தற்போது கூடுதலாக பின்பற்றக் கருதும் அறிவுறுத்தங்களை ஒருங்கிணைத்து ஒரு தொகுப்பு வழிகாட்டு நெறிமுறையாக வெளியிடலாம் என்று தமிழ் வளர்ச்சி இயக்குநர் அரசை கோரியுள்ளார். 4. அரசின் கவனமான பரிசீலனைக்கு பின், 2022-2023ஆம் ஆண்டுக்கான மேதகு ஆளுநர் உரையில் இடம்பெற்ற "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" அறிவிப்பினை செயற்படுத்த ஏதுவாக.

மேலே பத்தி 3.இல் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குநரின் கருத்துருவை பரிசீலித்து ஏற்று தமிழ்மொழி / தமிழ்மொழித் திட்டம் / தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணை.

கடிதங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தங்கள் மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் தற்போது பரிந்துரைத்துள்ள கூடுதல் அறிவுறுத்தங்கள் கீழ்காணும் தலைப்புகள் வாரியாக இணைப்புகளாக தொகுத்து வழிகாட்டு நெறிமுறை ஆணையாக வெளியிடப்படுகிறது.

I) இணைப்பு இல் ஏற்கனவே அரசாணை மற்றும் கடிதங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தங்களை தவறாது பின்பற்றுமாறு தொடர்புடைய அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மீள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

II) இணைப்பு 2-இல் தற்போது பரிந்துரைக்கப்படும் கூடுதல் விவரங்கள் அடங்கிய வழிகாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு தொடர்புடைய அரசு மற்றும் தனியார் அமைப்புகள் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

III) இணைப்பு 3இல் தற்போது பரிந்துரைக்கப்படும் இதர வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய அரசுத் துறைகள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.