அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு - அக்.31-ஆம் தேதி கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 13, 2023

அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு - அக்.31-ஆம் தேதி கடைசி நாள்

அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

சர்வதேச, தேசிய போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனையர், அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க, வரும், 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர், மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற, தமிழக வீரர் - வீராங்கனையரை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

● 2018 ஜனவரி முதல் சர்வதேச போட்டிகள், கோடைக்கால ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உலக, காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றவர்கள், வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

● சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றோரும், வெற்றி பெற்றோரும் விண்ணப்பிக்கலாம் ● தேசிய விளையாட்டு போட்டிகள், தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றோரும் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

● இதற்கு அனைத்து தகுதிகளுடன், 40 வயதிற்கு உட்பட்டோராக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, வரும், ௩1ம் தேதிக்குள் இணையதளம் வழியாகவோ, சென்னை தலைமை அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார் விளையாட்டு வீரா் - வீராங்கனைகள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

பல்வேறு போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றவா்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சா்வதேசம், தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரா் - வீராங்கனைகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான விளையாட்டு வீரா், வீராங்கனைகள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் அக்.31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்திலோ அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்திலோ விண்ணப்பம் செய்யலாம் என்று விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.