அரசு பள்ளிகளில் மாணவர்கள் மாநாடு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 22, 2023

அரசு பள்ளிகளில் மாணவர்கள் மாநாடு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



அரசு பள்ளிகளில் மாணவர்கள் மாநாடு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழக அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை.

அதனால், அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் வாயிலாக நிதி திரட்டி, பள்ளிகளின் தேவைகளை நிறைவேற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக இணையதளம் துவக்கப்பட்டு, முன்னாள் மாணவர்கள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டன. அந்த திட்டத்தை, தி.மு.க., அரசும், 'நம்ம ஸ்கூல்' என்ற பெயரில் துவங்கியது.

இதன்படி, இணையதளம் மட்டுமின்றி, அந்தந்த பள்ளிகளின் வழியாகவும், முன்னாள் மாணவர்களை திரட்டும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 27,514 பள்ளிகளில் படித்த, 4.46 லட்சம் முன்னாள் மாணவர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் மாணவர்களை இணைத்து, மாநிலம் தழுவிய மாநாடு நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இந்த மாநாடு நடக்கிறது. இதில், முன்னாள் மாணவர்கள் வழியே, அரசு பள்ளி செலவுகளுக்கு நன்கொடை திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.