மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வணக்கம்
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்து நிறைவேற்ற முயற்சிகள் கொள்ளும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிக்ள்
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் எதிர்ர்கால வாழ்வாழ்வாதாரா கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ,
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 12 ஆயிரம்பேரை காலமுறை ஊதியத்தில் கொண்டுவரவேண்டும்
இடைநிலை நிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல்
விளையாட்டுத்துறையில் அவுட்ஷோர்சிங் முறையில் பணியாற்றிவரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டு வரவேண்டும் , மருத்துவத்துறையில் பணியாற்றும் பன்நோக்கு பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவரவேண்டும், , ஊர்புற நூலகர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மேலும் , கிராம உதவியாளர்கள் , ஊராட்சி எழுத்தர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் கொண்டு வரவேண்டும் , ஊராட்சி குடிநீர் ஏற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ,
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் காலி பணியிடங்களை நிரப்பவேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மாண்புமிகு தமிழ்நாடு இளஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.