தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு கோரிக்கைகள் - நாள்:13.09.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 13, 2023

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு கோரிக்கைகள் - நாள்:13.09.2023



*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*மாநில அமைப்பு* *நாள்:13.09.2023*

*******

*புதுதில்லியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க STFI&JFME பேரணி!*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 120 பேர் பங்கேற்பு!*******

*இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு(STFI) மற்றும் JFME உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகள் இணைந்து இன்று (13.09.2023) புதுதில்லியில் ஜந்தர் மந்தரில் மாபெரும் தர்ணா போராட்டம் நடத்தின. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 120 பேர் உட்பட தமிழ்நாடு STFI சார்பில் 160 பேர் பங்கேற்றனர்.*

*மேலும், தமிழ்நாட்டிலிருந்து MUTA,அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் இருந்தும் பெருமளவில் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்தியா முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டத்தின் கோரிக்கைகள் பின்வருமாறு....* *தேசியக் கல்விக் கொள்கை-2020ஐ ரத்து செய்!*

*தேசிய ஓய்வூதியத் திட்டம்,பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை ரத்து செய்!*

*அனைத்து தற்காலிக/பகுதி நேர/தொகுப்பூதிய/ மதிப்பூதிய ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கு!*

*நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் சத்தான காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கு!*

*அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப் பணியிடங்களை நிரப்பிடு!*

*பொதுக் கல்வியைப் பாதுகாத்திடு!*

*ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் புதுதில்லியில் இன்று(13.09.2023) நடைபெற்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்ற இப்போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள்,மாதர் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் தலைவர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.*

*இப்போராட்டத்தில் STFI அகில இந்திய அமைப்பின் சார்பில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியத் துணைத் தலைவருமாகிய தோழர் ச.மயில் உரையாற்றினார்.* *******

*தோழமையுடன்* *ச.மயில்*

*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.