உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டில் கற்பிக்கப்பட வேண்டிய பாடங்கள் சார்ந்த பாடத்திட்டம் மாதவாரியாக . - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 4, 2023

உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டில் கற்பிக்கப்பட வேண்டிய பாடங்கள் சார்ந்த பாடத்திட்டம் மாதவாரியாக .

நான் முதல்வன்- 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு -CEO செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, விழுப்புரம் மாவட்டம்: முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாவணர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு வருகின்ற செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் செப்டம்பர் 11ஆம் வகுப்பு

மாணவர்களுக்கும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் மற்றும் உயர்கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர் பொறுப்புகள்:

கணினி மடிக்களினி ஸ்மார்ட் ஃபோன் போன்றவற்றின் மூலம் இணையவழியில் மதிப்பீடு நடத்திட முடியும். இச்செயல்பாட்டினை நடத்திட தேறையான இணைய வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உறுதி செய்திடல் வேண்டும். மாணவர்களுக்கு மதிப்பீடு தொடங்கும் முன் (05.09.2023) அன்று வழங்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகளக்கான பாடவேலையில் கீழ்க்காணும் அத்தியாயங்களை திருப்புதல் { Revision வகுப்புகளாக மாணவர்களுக்கு நடத்திட வேண்டும்.

செயல்பாட்டு வழிமுறைகள் இந்த மதிப்பீட்டை கணினி மடிக்கணினி ஸ்மார்ட் போன் போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளலாம்.

http://examstnschoolsgov.in.login என்ற இணையதன முகளியில் மாணவர்கள் User ID என்ற இடத்தில் தங்கள் EMIS ID யின் கடைசி நான்கு எண்களையும் என்றும் அதனைத் தொடர்ந்து அவர்களின் பிறந்த வருடத்தையும் உள்ளிட்டு உள் நுழைய வேண்டும்.

உள் நுழைந்ததும் உயர்கல்வி வழிகாட்டி புத்தகத்தில் உள்ள கீழ்க்காணும் அத்தியாயங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். மாணவர்கள் பதட்டம் எதுமின்றி தங்களுக்கு தெரிந்த விடைகளை பதிவு செய்ய வேண்டும். விடைகள் அளித்த பின் Save & Submit கொடுத்து வெளியேறலாம். எனவே, தற்போது 2023-24ம் கல்வியாண்டில் ஆகஸ்ட் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டில் கற்பிக்கப்பட வேண்டிய பாடங்கள் சார்ந்த பாடத்திட்டம் மாதவாரியாக கீழ்காணும் வழங்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மேற்காண் வழிக்காட்டுதல்களை பின்பற்றி இம்மதிப்பீடு முழுமையாக நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.

மதிப்பீட்டு தேர்வில் கலந்து கொண்ட/கொள்ளாத மாணவர்களின் தகவல்கள் கலந்து கொண்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்கள் தேர்வு முடிந்த ஓரிரு வாரங்களில் பகிரப்படும். உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியர்கள் வாயிலாக அனைத்து மாணவர்களுக்கு கற்பிக்கவும் அதன் மூலம் மாணவர்கள் பயனடைவதை உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.