1- 5 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி & 1-5 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 18, 2023

1- 5 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி & 1-5 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம்

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை முதல் பருவ தேர்வு 20.09.2023 முதல் 27.09.2023 வரை இணைய வழியிலும் அதே நாட்களில் தேர்வு தாள் வடிவில் நான்கு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் எனவும் தமிழக தொடக்கக்கல்வி துறை அறிவிப்பு.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி 04.10.2023 முதல் 06.10.2023 வரை நடைபெறும் எனவும் நான்கு, ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 09.10.2023 முதல் 11.10.2023 வரை நடைபெறும் என அறிவிப்பு.

1- 5 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் தேதி மாற்றம் - 1-5 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம் SCERT & DEE இணைச் செயல்முறைகள்!

1 முதல் 5 வகுப்புகளுக்கு 20.09.2023 முதல் 27.09.2023 வரை முதல் பருவத் தேர்வு.

1 முதல் 3 வகுப்புகளுக்கு மட்டுமே செயலி வழி தேர்வு. நிலைக்கேற்ப ஐந்து வினாக்கள் மட்டும் கேட்கப்படும்.

4, 5 வகுப்புகளுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே செயலியில் pdf வினாத்தாள் வெளியிடப்படும். பிரிண்ட் எடுத்து வைக்கவும்.

இனிவரும் காலங்களில் 15 நாளுக்கு ஒரு முறை மட்டுமே வளரறிமதிப்பீடு (ஆ)

தேர்வு தேதிகள் மாறியதால் இரண்டாம் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி தேதிகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

1 முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் - 4.10.223 முதல் 06.10.2023 வரை

4 முதல் 5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் - 9.10.223 முதல் 11.10.2023 வரை
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - எண்ணும் எழுத்தும் திட்டம் - 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு - தொகுத்தறி மற்றும் வளரறி மதிப்பீடு (ஆ) நடத்துதல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறுதல் சார்ந்த திருத்தி அமைக்கப்பட்ட சுற்றறிக்கை சார்ந்து

எண்ணும் எழுத்தும் திட்டமானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதலாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு 20.09.23 அன்று முதல் 27.09.23 வரை செயலி மூலம் நடத்திட வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் அவரவர் நிலைக்கேற்றவாறு கேள்விகள் 5 மட்டுமே செயலியில் இடம்பெறும். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதலாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு நிர்வாக காரணங்களுக்காக எழுத்துத் தேர்வாக (pen and paper test) மட்டுமே 20.09.23 முதல் 27.09.23 வரை மேற்கொள்ள வேண்டும்.

எழுத்து தேர்விற்கான வினாத்தாள்கள் Pdf வடிவில் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள்களை செயலியில் பதிவிறக்கம் செய்து தொகுத்தறி மதிப்பீட்டினை மேற்கொள்ளலாம்.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பதிவேட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாரம் தோறும் நடைபெற்ற வளரறி மதிப்பீடு (ஆ)FA(b) இரண்டாம் பருவம் முதல் பதினைந்து (15) திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்களுக்கு ஒரு முறை நடத்திட 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு 20.09.23 முதல் 27.09.23 வரை நடைபெறுவதால் வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சியின் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

04.10.23 முதல் 06.10.23 வரை ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் 09.10.23 முதல் 11.10.23 வரை நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் நடைபெறும் என்பது தெரிவிக்கப்படுகிறது.

இவ் அறிவிப்பினை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.