B.Ed., In Service Training Proceedings by DSE - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கல்வியியல் படிப்பு பயிலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்பாக அனைத்து CEO&DEOகளுக்கு அறிவுரை - DSE செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 8, 2023

B.Ed., In Service Training Proceedings by DSE - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கல்வியியல் படிப்பு பயிலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்பாக அனைத்து CEO&DEOகளுக்கு அறிவுரை - DSE செயல்முறைகள்



B.Ed., In Service Training Proceedings by DSE

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.

ந.க.எண்.050183/இநேமுஉ/2023, நாள்.06.09.2023

பொருள்:


பள்ளிக்கல்வி 2023-2024 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கல்வியியல் படிப்பு பயிலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்பாக அனைத்து முதன்மை மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல்-சார்பு. பி.எட், எம்.எட் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்சிக்காக சுமார் 80 நாட்கள் அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். கடந்த ஆண்டு முதல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின்(TNTEU) வழிகாட்டுதலுடன் பள்ளிகல்வித்துறை இயக்குநரகத்தால் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளுக்கு இந்த பயிற்சி மாணவர்களுக்கான பள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கப்பட்ட பயிற்சி மாணவர்களின் மாவட்டம், வட்டம் வாரியான பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இப்பட்டியலை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்பட்டியல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழியாக அந்தந்த கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் கல்லூரிகளுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால், அவர்கள் அதை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திடம் நேரடியாக கொண்டு செல்வர். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஒவ்வொரு பள்ளிக்கும் மொத்த எண்ணிக்கையை மட்டுமே பள்ளி கல்வித் துறை மாணவர்களின் இயக்குநரகத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் எந்த மாணவர்களை ஒதுக்குவது என்பதை அக்கல்லூரியே முடிவு செய்யும். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக (TNTEU) உறுப்பு கல்லூரிகளுக்கு மட்டுமே ஒதுக்கீடுகள் பொருந்தும். பிற பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்லூரிகள் (தன்னாட்சி அல்லது வேறு) முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகினால், அக்கல்லூரிகளுக்கு தகுந்த ஒதுக்கீட்டை முதன்மைக்கல்வி அலுவலர் அளவிலேயே வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும், சிறப்புக் கல்விக் கல்லூரிகள் கற்றல் கற்பித்தல் பயிற்சிக்கு பள்ளிகளை ஒதுக்கீடு செய்யக்கோரி அணுகினால், அக்கல்லூரிகளுக்கு தகுந்த ஒதுக்கீட்டை தங்கள் அளவிலேயே செய்யுமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வொதுக்கீட்டில் தேவைப்படும் எண்ணிக்கையைவிட கூடுதலாக உள்ள ஆசிரியர் பயிற்சி மாணவர்களை அருகில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளுக்கு கற்றல் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அளவிலேயே நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆசிரியர் பயிற்சி மாணவர்களை ஒதுக்கீடு செய்யப்பட்ட உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிக்கும், அருகிலுள்ள நடுநிலைப்பள்ளிக்கும், இரு பிரிவுகளாக பிரித்து சுழற்சி முறையில் அனுப்பி கற்றல் கற்பித்தல் பயிற்சியினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கற்றல் கற்பித்தல் பயிற்சிக்கென எந்த பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அந்த உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரே சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

அவர்களுக்கு உரிய பயிற்சி மாணவர்கள் செப்டம்பர் 11 முதல் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வரத் தொடங்குவார்கள். அவர்களை பள்ளிகளில் பயனுள்ள வகையில் உரிய பயிற்சியில் ஈடுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த அறிவுரைகள் அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு : மாவட்ட வாரியாக ஒதுக்கீடு

(மின்னஞ்சல் மூலம்)




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.