equal pay for equal work - சமவேலைக்கு சம ஊதியம் கோரி ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 17, 2023

equal pay for equal work - சமவேலைக்கு சம ஊதியம் கோரி ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு



சமவேலைக்கு சம ஊதியம் கோரி ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 ஜூன் 1க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயி ரத்து 370 அடிப்படை ஊதியமும், அதன் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ. 5 ஆயிரத்து 200 அடிப்படை ஊதிய மும் வழங்கப்பட்டது.

இதனால் 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண் டும் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் பல்வேறு போராட் டங்களை நடத்தியது.

கடந்த டிசம்பர் இறுதியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவி ரத போராட்டம் நடத்தினர்.


இவர்களின் கோரிக்கை குறித்து ஆராய3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட் டது. இந்த குழு, ஆசிரியர்கள் சங்கங்க ளுடன் கருத்துகளை சேகரித்து வருகிறது.

இந்நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின், கோரிக்கை வென்றிட ஆயத்த மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. இதில், செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் முதல் செப்டம்பர் 27 வரை கோரிக்கை அட்டை அணிந்து பள்ளிக்கு செல்ல முடிவெடுத் தனர்.

அதன்பிறகும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், செப்டம்பர் 28ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த தீர்மானம் நிறை வேற்றினர். கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் கைவிடப்படாது என ஆசி ரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.