முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாநில அரசின் கலந்தாய்வு இணையவழியில் நாளை (ஆக.7) தொடங்கவுள்ளது. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 6, 2023

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாநில அரசின் கலந்தாய்வு இணையவழியில் நாளை (ஆக.7) தொடங்கவுள்ளது.



முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாநில அரசின் கலந்தாய்வு இணையவழியில் நாளை (ஆக.7) தொடங்கவுள்ளது.

நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., டிப்ளமோ மற்றும் பல் மருத்துவப் பட்டமேற்படிப்பான எம்டிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வில் தகுதிப் பெறுபவா்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தத் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.

நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்த இடங்கள், நிகா்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் கலந்தாய்வு நடத்துகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.