குறுவள மைய கூட்டங்கள் 1 முதல் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரே தேதியில் நடைபெறும் என்று இயக்குனர் அவர்கள் அளித்த உறுதிமொழி என்னவாயிற்று? - AIFETO கேள்வி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 2, 2023

குறுவள மைய கூட்டங்கள் 1 முதல் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரே தேதியில் நடைபெறும் என்று இயக்குனர் அவர்கள் அளித்த உறுதிமொழி என்னவாயிற்று? - AIFETO கேள்வி

*குறுவள மைய கூட்டங்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரே தேதியில் நடைபெறும் என்று இயக்குனர் அவர்கள் அளித்த உறுதிமொழி என்னவாயிற்று?...*

*AIFETO.. 01.08.2023.* *தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.*

*மதிப்புமிகு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அவர்களுக்கு வணக்கம்..*

*தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் பிரதிநிதிகள் டிட்டோஜாக் சார்பாக தங்களை இன்று சந்தித்து பேசினார்கள். சந்திக்கும் பொழுது இயக்குனர் அவர்களே முன்வந்து நீங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரே தேதியில் பயிற்சி கூட்டத்தினை நடத்துகிறோம் என்றும் அதற்கான அறிவிப்பினை வழங்கி இருக்கிறோம் என்றும் தெரியப்படுத்தியுள்ளார்கள்.* *ஆனால் திருப்பூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தின் முதல்வர் அவர்களும், திருச்சி மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தின் (பொறுப்பு) முதல்வர் அவர்களும் வரும் 5 ஆம் தேதி ஒன்று முதல் மூன்று வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தனியாக பயிற்சியும், 12ஆம் தேதி 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தனியாக பயிற்சியும் நடைபெறும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.*

*இன்னும் பரவலாக பல மாவட்டங்களிலும் இரண்டு நாட்களாக தனித்தனியாகத்தான் பயிற்சி நடைபெற இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். முறையாக டிடோஜாக் பிரதிநிதிகளிடம் இயக்குனர் அளித்த உறுதிமொழி என்னவாயிற்று?..*

*மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவன முதல்வர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறார்கள்?.. அவர்களுக்கு வேலை இல்லை. கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்ற ஆசிரியர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்கி வருகிறார்கள்.*

*3ஆம் தேதி ஆடிப்பெருக்கு நடைபெறக்கூடிய பயிற்சியில் பெண் ஆசிரியர்களே அதிகமாக கலந்து கொள்கிறார்கள். ஆனால் பிடிவாதமாக அதே தேதியில் பயிற்சி நடத்த இருக்கிறார்கள். இவர்களுடைய பிடிவாதமான செயல்பாட்டினால் மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்களின் மீது ஆசிரியர்களுக்கு அதிருப்தி கூடுதலாகி வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள அரசு மீது வெறுப்புணர்வு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. ஆசிரியர்களின் வாக்கு வங்கியை சிதைக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்து வருகிறார்கள் என்று தான் நாங்கள் நம்ப வேண்டியிருக்கிறது.* *மதிப்புமிகு மாநில ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவன இயக்குனர் அவர்கள் அவசர நடவடிக்கை மேற்கொண்டு குறுவளமையக் கூட்டத்தினை ஒரே கூட்டமாக நடத்துவதற்கும், ஆடிப்பெருக்கன்று நடைபெறும் பயிற்சியினை பிறிதொரு நாளில் நடத்துவதற்கு உரிய அறிவிப்பினை வழங்கிட வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.*

*இந்தத் தகவலினை முதலமைச்சர் அவர்களின் நுண்ணறிவு பிரிவு மூலமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் கொண்டு சென்றுள்ளோம் என்பதை தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம்.*

*மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களும் மாணவர்கள் ஆசிரியர்கள் நலன் கருதி வளர்ந்து வரும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுகிறோம்.*

*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.