நாங்குநேரி மாணவரை சாதிய வண்ணம்கொண்டு தாக்கிய சக மாணவர்களை தூண்டியவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 11, 2023

நாங்குநேரி மாணவரை சாதிய வண்ணம்கொண்டு தாக்கிய சக மாணவர்களை தூண்டியவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

Tamil Nadu Government Employees Teachers' Welfare Federation urged to take action to arrest those who instigated fellow students who assaulted Nanguneri student with caste color- நாங்குநேரி மாணவரை சாதிய வண்ணம்கொண்டு தாக்கிய சக மாணவர்களை தூண்டியவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஊடகம் மற்றும் பத்திரிகை செய்தி

நாங்குநேரி மாணவரை சாதிய வண்ணம்கொண்டு தாக்கிய சக மாணவர்களை தூண்டியவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - நிறுவனத் தலைவர் - அருணன் - வலியுறுத்தல்

~~~~

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெரியநதெரு பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த முனியாண்டி மற்றும் அம்பிகாபதி ஆகியோரின் மகன் சின்னதுரை வெள்ளியூர் அரசு மேனிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் சாதிய ரீதியாக கொடுமை படுத்திவந்தனர் அதாவது மாணவர்களின் புத்தகப்பையை சுமக்கவைப்பது , சின்னதுரையை அடித்து அவர் கொண்டுவரும் பணத்தை எடுத்துக் கொள்வது இதுபோன்ற கொடுஞ்செயலை செய்து வந்துள்ளனர் , இந்த பயத்தில் மாணவன் ஒரு வார காலமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்திருக்கிறார் இதை ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்து ஏன் பையன் பள்ளிக்கு வரவில்லை என கேட்டிருக்கின்றனர் பிறகு பள்ளிக்கு போக மறுக்கின்றாய் என பெற்றோர்கள் கேட்க சின்னதுரை நடந்ததை சொல்ல பெற்றோர் சின்னதுரையை பள்ளிக்கு அழைத்து சென்றிருக்கின்றனர், பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவி்தனர் சம்மந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்து அனுப்பி இருக்கின்றனர் ஆசிரியர்கள் , இதனை தாங்கிக் கொள்ள முடியாத சாதிய வண்மம் கொண்ட மாணவர்கள் 09.08.2023 அன்று 10 மணிக்கு மாணவன் சின்னதுறை வீட்டிற்கு சென்று சின்னதுரையை பயங்கரமாக கத்தியால் பல இடங்களில் வெட்டி வெறியாட்டம் ஆடி இருக்கின்றனர் தடுக்க வந்த தங்கை சந்திராவையும் கத்தியால் தாக்கியுள்ளனர் இந்த சம்பவத்தை நினைத்தால் நெஞ்சு வலிக்கிறது நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றோமா என்ற கேள்வி எழுகிறது சமூக நீதிக்காத்த தலைவர்கள் வாழ்ந்த மண்ணிலா நாம் வாழ்கிறோம் என்ற எண்ணம் தோன்றுகிறது தமிழ்நாட்டிலா இதுபோன்ற நிகழ்வு நடக்கிறது ஒவ்வொருவரையும் வெடகப்பட வைக்கிறது , இதில் சம்மந்தப்பட்ட மாணவர்களை கைது செய்திருப்பதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறது அதே சமயத்தில் வண்கொடுமை சட்டத்தில் கைது செய்து உடனே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் இதுபோன்ற சாதிய ரீதியான சம்பவங்கள் மாணவர்கள் மனதில் தூண்டுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டணையை பெற்ற்த்தரவேண்டும் அது பெற்றோர்களாக இருந்தாலும்,தண்டிக்க வேண்டும்

இச்சம்பவத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலைச்சர் அவர்கள் கண்டித்திருப்பதும் மாண்புமிகு பள்ளிக்கல்ஙித்துறை அமைச்சர் அவர்கள் தன் வேதனையை தெரிவித்திருப்பது ஆறுதலையும் மாணவர்களிடம் சாதிய நச்சுக்களை தடுக்க உதவும் நம்பிக்கை உள்ளது

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.