தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் வேளாண் அறிவியல் பாடத்தினை அறிமுகம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 10, 2023

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் வேளாண் அறிவியல் பாடத்தினை அறிமுகம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை!

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் வேளாண் அறிவியல் பாடத்தினை அறிமுகம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை!

பள்ளிக்கல்வித்துறையில், பொதுக் கல்வி பாடத்திட்டத்தை போன்று தொழிற்கல்வி பாடங்களும் 1978 ஆம் ஆண்டு முதல் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

வேளாண்மை பாடத்தைப் பொறுத்தவரை, உரிய கல்வித் தகுதி இல்லாத பிற ஆசிரியர்கள் கொண்டு பயிற்றுவித்து வந்ததை.. 1996 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களிடம், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் அமைப்பு மற்றும் தமிழ்நாடு வேளாண்மை அலுவலர்கள் சங்கம் ஆகியோர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்...

மேல்நிலைக் கல்வியில் உள்ள வேளாண்மை பாடத்தை வேளாண்மை அறிவியல் பட்டம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு நடத்துவதற்கு அரசாணைகள் 129, 63, 143 ஆகியவை வெளியிடப்பட்டன.. அதன்படி இதுவரை 293 வேளாண்மை பட்டதாரிகள், வேளாண் அறிவியல் ஆசிரியர்களாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர்..ஆசிரியர் தேர்வு வாரிய பணியிடம் என்பதால் 2016 ஆம் ஆண்டு முதல் பணியிட மாறுதல் நிகழ்வும் நடைபெற்று வருகிறது..

தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை கையாளும் இதர ஆசிரியர்களின் பணியிடங்கள் அவர்களின் பணிக்காலத்திற்கு பிறகு பாடப்பிரிவுகள் மூடப்படும் சூழலில்.. ஆசிரியர் தேர்வு வாரிய பணியிடங்களான வேளாண் அறிவியல் ஆசிரியர்களையும் தவறான புரிதல்களால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களும், அரசின் எவ்வித உத்தரவும் இன்றி வேளாண் அறிவியல் பாடப் பிரிவுகளை மூடி வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் அக்ரி மு மாதவன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் இயக்குனர், இணை ஆகியோருக்கும் நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் தெரிவித்து, தொடர்ச்சியாக பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடப்பதற்கும், 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மூடப்பட்ட பாடப்பிரிவுகளை மீண்டும் இந்த கல்விஆண்டிலேயே துவங்கி நடத்திடவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கைகளை அனுப்பியுள்ளனர்..

வளமான தமிழகத்தை உருவாக்க, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வேளாண் அறிவியல் பாடத்தை பொதுக் கல்வித் திட்டத்தில் அறிமுகம் செய்து, வேளாண் பட்டதாரிகளை முதுநிலை ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டி அரசின் தக்க நடவடிக்கையை எதிர்பார்த்து கடிதம் அனுப்பி உள்ளதாக, தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் அக்ரி மு. மாதவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.