நாடு முழுவதும் 374 மாவட்டங்கள், கல்வியில் பின் தங்கிய மாவட்டங்கள் - பட்டியலை வெளியிட்ட ஒன்றிய அரசு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 1, 2023

நாடு முழுவதும் 374 மாவட்டங்கள், கல்வியில் பின் தங்கிய மாவட்டங்கள் - பட்டியலை வெளியிட்ட ஒன்றிய அரசு!

இந்தியாவில் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்கள் பட்டியலை வெளியிட்ட ஒன்றிய அரசு! - The Union Government released the list of backward districts in education in India!

2008ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்ட தரவுகளின்படி, உயர் கல்வியில் சேர்க்கை விகிதத்தின்(GER) அடிப்படையில், நாடு முழுவதும் 374 மாவட்டங்கள், கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது.



தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக மக்களவையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தகவல் - Union Education Minister informs Lok Sabha that 27 districts in Tamil Nadu are backward in education

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக மக்களவையில் ஒன்றிய கல்வி அமைச்சர் நிஷிகாந்த் துபே தகவல்

அரியலூர், கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், குமரி, கரூர், மதுரை. நாகை, பெரம்பலூர். புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை. தஞ்சை,நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகரும் கல்வியில் பின்தங்கியவை என அறிவிப்பு 2008ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்ட தரவுகளின்படி, உயர் கல்வியில் சேர்க்கை விகிதத்தின்(GER) அடிப்படையில், நாடு முழுவதும் 374 மாவட்டங்கள், கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 41 மாவட்டங்களும், மத்தியபிரதேசத்தில் 39 மாவட்டகளும் பட்டியளிடபட்டுள்ளது.

இந்த பட்டியளில் தமிழ்நாட்டை சேர்ந்த 27 மாவட்டங்கள் பட்டியளிடபட்டுள்ளது.நேற்று (31.07.2023) பதிலளித்த நிஷிகாந்த் துபே மற்றும் ஸ்ரீ என். ரெட்டப்பா, கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்வியெழுப்பபட்டிருந்தது. இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு, கடந்த காலத்தில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) 2008 இல் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தின் (GER) அடிப்படையில் 374 கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களை கண்டறிந்தது.

இடைப்பட்ட காலத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) என்ற திட்டமானது, சேவையற்ற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உயர்கல்வியில் அணுகல், சமத்துவம் மற்றும் சிறப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது. ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் இன்றுவரை, 2972 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதற்காக மத்திய பங்கு ரூ.7085.40 கோடி ஜார்கண்ட் உட்பட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.பிரதான் மந்திரி உச்சதர் சிக்ஷா அபியான் (PM-USHA) வடிவில் RUSA இன் அடுத்த கட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

2023-24 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுக்கு ரூ.12926.10 கோடி, இந்த திட்டத்தின் கீழ் குறைந்த , பாலின சமத்துவம், SC/ST களின் மக்கள் தொகை விகிதம் போன்றவற்றின் அடிப்படையில் ஆர்வமுள்ள மாவட்டங்கள், LWE பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் கவனம் செலுத்தும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.