AIFETO: 11.08.2023 - தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுடன் ஆசிரியர் கூட்டணி சந்திப்பு... தீர்வுகளும் பெற்றுள்ள தகவல்களும்... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 12, 2023

AIFETO: 11.08.2023 - தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுடன் ஆசிரியர் கூட்டணி சந்திப்பு... தீர்வுகளும் பெற்றுள்ள தகவல்களும்...



தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுடன் ஆசிரியர் கூட்டணி சந்திப்பு... தீர்வுகளும் பெற்றுள்ள தகவல்களும்...

மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுடன் ஆசிரியர் கூட்டணி சந்திப்பு... தீர்வுகளும் பெற்றுள்ள தகவல்களும்...

AIFETO.... 11.08.2023..

தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண் : 36/2001.

மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் மூலம் பெற்றுள்ள பயனுள்ள தகவல்கள்- தீர்வுகள்.

10.08.2023 அன்று மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்களும், பொதுச்செயலாளர் திரு.அ.வின்சென்ட்பால்ராஜ் அவர்களும் சந்தித்து கோரிக்கை விண்ணப்பங்களை அளித்து தீர்வுகாண கேட்டுக் கொண்டார்கள். தொடக்கக் கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) மதிப்புமிகு சுகன்யா அவர்களும் உடன் இருந்தார்கள்.

நன்றி பாராட்டுதல் சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றிய ஆசிரியர்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் அயல் மாநில ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் மதிப்பீடு தொடர்பான மாநிலக் கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி இயக்ககத்திடமிருந்து தெளிவுரை யினைப் பெற்று அனுப்பியிருந்தீர்கள். மிக்க நன்றிங்க.

அதுபோல் ஈரோடு மாவட்டம்-தாளவாடி மற்றும் ஓசூர், திருச்செந்தூர் என பல்வேறு பகுதியிலுள்ள ஆசிரியர்களுக்கும் அயல் மாநிலச் சான்று மதிப்பீடு செய்வதற்கு மதிப்பெண்ணை ஒப்பிட்டும் பார்க்காமல் தேர்ச்சியினை கணக்கில் எடுத்துக் கொண்டு தீர்வுகாண வேண்டுமென கேட்டுக் கொண்டோம். அவ்வாறே அறிவுரை வழங்குவதாகவும் இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்கள்.

தற்காலிக ஆசிரியர் நியமனம்: 2023 சூன் மாதம் முதல் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் அந்நாள் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரையின் பேரில்-தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். ஊதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கேட்டோம்.

தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதற்கு தடையினைப் போன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்காலிக ஆசிரியர் நியமனங்களை நிறுத்திவிட்டு நிரந்தர ஆசிரியர் நியமனங்களை உடன் செய்யச் சொல்லி அறிவுரை வழங்கிவிட்டது.அதனால் நிதி ஒதுக்கீடு கேட்பதற்கும் அனுமதி கேட்டுள்ளோம். வருகின்ற பதிலைப் பொறுத்துதான் தற்காலிக ஆசிரியர்களின் ஊதியம்?

அரியலூர் மாவட்டத்தில் 60 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு-தற்காலிக ஆசிரியர்கள் சூன் மாதம் முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஊதியம் வரவில்லை என்றோம். தொடக்கக் கல்வி இயக்குநர் நிதி ஒதுக்கீடு கேட்பதற்கு நீதிமன்றம் அனுமதித் தால் பெற்றுவிடலாம். முயற்சித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

கூடுதல் பணியிடம் இயக்குநர் தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டது மீண்டும் வழங்கப்பட வேண்டும். ?

1.8.2022ல் மாணவர்களின் எண்ணிக்கையினை கணக்கில் எடுத்துக்கொண்டு 1 முதல் 5 வகுப்புவரை 120 மாணவர்கள் இருந்தால் கூடுதல் பணியிடம் என காரணம் காட்டி எடுக்கப்படவில்லை. ஆகஸ்டு 31ற்குள் 120 மாணவர்கள் 125 மாணவர்களாக சேர்க்கப்பட்டு விட்டார்கள்.

மூன்று ஆசிரியர் பள்ளியில் 57 மாணவர்கள் இருந்தது ஆகஸ்டு மாதத்திற் குள்ளாக 62,63 மாணவர்கள் சேர்ந்துவிட்டார்கள்.

ஆனால் 1.8.2022ன் கணக்குப்படி உள்ள கூடுதல் பணியிடத்தினை இயக்குநர் தொகுப்புக்கு அனுப்பிட செயல்முறைக்கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது. மாணவர் களின் கல்விநலன் பெரிதும் பாதிக்கப்படும்.

பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) யிடமிருந்து 1.8.2023ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின்படி பணிநிரவல் செய்யப்படும் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வித் துறையிலும் 1.8.2023ன்படி மாணவர்கள் எண்ணிக்கை தகுதியாக இருந்தால் மீண்டும் பணியிடம் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டோம். தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள்: உடன் இருந்த தொடக்கக் கல்வி இணை இயக்குநர் (நிர்வாகத்திடம்) அளித்து உடன் நடவடிக்கையினை அமல்படுத்திட வலியுறுத்தினார்.

ஆகஸ்டு மாத இறுதிக்குள்ளாக சரிசெய்யப்பட்டுவிடும் என்றார்.

கோரிக்கை 1 : ஆகஸ்டு மாதத்துடன் ஆசிரியர் பணிநிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 1 முதல் மறு நியமனம்-பணிநீடிப்பு வழங்கப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டோம்.

தஞ்சை மாவட்டம்-ஒரத்தநாடு ஒன்றியத்தில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் ஒருவருக்கு பணிநீடிப்பு வழங்குவதில் அந்த ஒன்றியத்தில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஒன்று கூடுதலாக உள்ளதால் மறுத்து வருவதாக தெரிவித்துள்ளார்கள் என்றோம்.

தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் தஞ்சை மாவட்டக் கல்வி அலுவலர் தொடக்கக் கல்வியிடமும், பட்டுக்கோட்டை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் இணை இயக்குநர் நிர்வாகத்திடமும் செல்லிடப்பேசியில் பேசி அந்தப் பள்ளியில் கூடுதல் பணியிடம் இல்லை. அதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு அனுமதியுங்கள் என அறிவுரை வழங்கினார்கள்.

கோரிக்கை 2: புதுக்கோட்டை மாவட்டச்செயலாளர் திரு.கே.எஸ்.வி.ஆர். சாத்தப்பன், பட்டதாரி ஆசிரியர், அரிமளம் ஒன்றியம்-லண்டன் வெளிநாடு செல்வதற்கு அனுமதி தொடர்பாக கேட்டோம்.

இயக்குநர் அவர்கள் உடன் குறிப்பெழுதி அனுப்பிடச் சொன்னார்கள். ஈரோடு வட்டாரம் IFHRMS பிரச்சினையில் ஊதியப்பாதிப்பு ஏற்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு விவரங்கள் தெளிவாக தெரிவிக்கப்பட்டதால் உடன் ஆவன செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

பவானிசாகர் ஒன்றியம் தனியார் பள்ளியில் 11 ஆண்டுகள் பணியாற்றியவருக்கு அங்கு பெற்றுள்ள தேர்வு நிலை ஊதியத்தினை அரசுப் பள்ளியில் பணி நியமன நாளிலிருந்து தொடர வேண்டுமென நீதிமன்றத் தீர்ப்பினைக் கொண்டு வலியுறுத்தினோம். நமக்கும் தெரிந்தது தான். சிறப்பு நிலைக்கு தகுதியான ஆண்டில் சிறப்பு நிலைக்கு எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்கள். மிகவும் பாதிப்பான தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் தேர்வு நிலைக்கு ரூ.5400 தர ஊதியம் தணிக்கைத் தடையினை நீக்குவதற்கு நிதித்துறையிடமிருந்து தெளிவுரையினை விரைவில் பெற்று நிரந்தரத் தீர்வு காண்போம் என்று தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் ஒன்றியத்தில் பணிநிறைவு பெற்றவர்கள் 3 பேருக்கும் உடனடித் தீர்வு - தணிக்கைத் தடையினை நீக்குவதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் அவர்கள் உறுதியளித்தார்கள்.

மீண்டும் சந்திப்பதாக நன்றி பாராட்டுதலுடன் விடைபெற்று வந்தோம். இந்த சந்திப்பில் திருவள்ளூர் மாவட்டம் மூத்தத் தலைவர் ஐபெட்டோ அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் திரு.ந.கண்ணப்பன், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ப.சரவணன்,பொன்னேரி கல்வி மாவட்டச் செயலாளர் மாநில தீர்ப்பாயக்குழு உறுப்பினர் திரு.பெ.பா.முரளி, திருவாலங்காடு வட்டாரச்செயலாளர் ஓ.என்பிரபுகாமராஜ் உடன் இருந்தார்கள்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.