தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு - மாநில மையம் - ஆசிரியர் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு அலுவலர்களுடன் சந்திப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 29, 2023

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு - மாநில மையம் - ஆசிரியர் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு அலுவலர்களுடன் சந்திப்பு!



தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நேற்று சென்னையில்

*மாநில பொதுச் செயலாளர்* *P பேட்ரிக ரெய்மாண்ட் அவர்கள்* தலைமையில்

மாநில பொருளாளர் தங்கவேலு, மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜான் கென்னடி, மாநில செயலாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் ஆசிரியர் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு அலுவலர்களை சந்தித்தனர். 1. *பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர்*

➖➖➖➖➖➖➖➖

🎯 தொடக்கக் கல்வித் துறையில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, ஊக்க ஊதியம், ஆசிரியர் தகுதி தேர்வு, தொடக்க கல்வித்துறை இடம் மாறுதல் கலந்தாய்வினை விரைந்து நடத்துதல், தொடர்பான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

*_பள்ளிக் கல்வி_*

➖➖➖➖➖➖➖➖

🎯 *பதவி உயர்வுக்கு TET அவசியம் என்பது குறித்த வழக்கு, பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும், குறைந்தபட்சம் எட்டு பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்தாமல் தவிர்த்தல், கல்வி சாரா பணிகள் இருந்து விலக்களித்தல் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன*. *முதன்மைச் செயலாளர் அவர்களின் பதிலுரை*

➖➖➖➖➖➖➖➖

🎯 அனைத்து துறைகளிலும் பதவி உயர்வு வழங்குவது அரசாணைகளில் மாற்றம் செய்வது குறித்த பணிகள் நடைபெற்று வருகின்றன மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது அதன் அடிப்படையில் கண்டிப்பாக தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு நேரடி நியமனத்தில் உரிய ஒதுக்கீடு வழங்கி பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்

🎯 தகுதி தேர்வு பிரச்சனையில், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களை பாதுகாப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை துணை நிற்கும்.

🎯 உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் மற்றும் பிற கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சரிடம் விவாதிக்கப்பட்டுள்ளது விரைவில் முதல்வரிடம் கலந்து அறிவிப்புகள் வெளியிடப்படும்.

*பள்ளிக்கல்வி இயக்குனர் சந்திப்பு*

➖➖➖➖➖➖➖➖

🎯ஆசிரியர் தகுதி தேர்வு பிரச்சனைகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து பதவி உயர்வுகள் வழங்கப்படும் முதுகலை ஆசிரியராக சென்றவர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக வருவது குறித்த வழக்கில் சட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது விரைந்து முடிவெடுக்கப்படும்.

🎯ஊக்க ஊதியம், கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம், பணி நிரவல் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். *தொடக்கக்கல்வி இயக்குனர்*

➖➖➖➖➖➖➖➖

🎯6,7,8 வகுப்புகளில் 100க்கும் அதிகமான மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு *ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்

அந்த அறிவிப்புக்கான அரசாணையை விரைந்து பெற்று வழங்க வேண்டும்* என வலியுறுத்தப்பட்டது.(அரசாணைக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும்)

🎯 அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றவர்கள் விடுவிக்கப்படும்போது அந்த காலி பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்கும், நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதை சார்ந்து நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் நீதிமன்றத்தில் விலக்கு பெற்று விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்

🎯 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான புதிய அரசாணை வெளியிட பரிந்துரை அனுப்பப்பட்டு விட்டது. பள்ளிக்கல்வித்துறை செயலரின் பரிசீலனையில் உள்ளது.

தொடக்கக் கல்வித் துறையில் கலந்தாய்வு நடத்துவதற்கு நீதிமன்ற வழக்கு தடையாக உள்ளது தடையானை விலக்குவதற்கான முயற்சிகளை தொடக்க கல்வி இயக்ககம் செய்து வருகிறது. ஆசிரியர் பயிற்சி *மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனருடன் சந்திப்பு*

➖➖➖➖➖➖➖➖➖

🎯 பயிற்சிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால் கற்றல் பணி பாதிக்கப்படுகிறது ஆசிரியர் பயிற்றுநர்களை ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

பதில்;

ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டி உள்ளது வருங்காலங்களில் அவற்றைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

🎯 பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பை மாற்றுவது மற்றும் அனைத்து பாடங்களுக்கும் அகமதிப்பீட்டு வழங்குவது உள்ளிட்டவற்றை பரிசீலிப்பதற்காக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

விரைவில் அந்தக் குழு கூடி அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து நியாயமான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

➖➖➖➖➖➖➖➖

ஆசிரியர்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதில் நம்முடைய அமைப்பு எப்போதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இணை இயக்குனர்களையும் சந்தித்து ஆசிரியர்களின் சில தனிப்பட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது

➖➖➖➖➖➖➖➖➖

*மாநில மையம்*

*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.