TET தேர்வு கட்டாயமல்ல – ஆசிரியர்களுக்கான அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 3, 2023

TET தேர்வு கட்டாயமல்ல – ஆசிரியர்களுக்கான அறிவிப்பு!



TET தேர்வு கட்டாயமல்ல – ஆசிரியர்களுக்கான அறிவிப்பு!

மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயமில்லை எனவும், புதிதாக தகுதித்தேர்வு அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. TET தேர்வு:

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அரசின் அறிவிப்பிற்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு கட்டாயமாக போட்டித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் வழங்கப்படும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் புதிதாக மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு TET தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் இல்லை என அமைச்சரவை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு பதிலாக, மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET-கம்-ஆட்சேர்ப்பு என்கிற தேர்வினை அறிமுகம் செய்ய இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.