வளரறி மதிப்பீடு பதிவு செய்ய இணைப்பு கிடைக்காததால் தவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 6, 2023

வளரறி மதிப்பீடு பதிவு செய்ய இணைப்பு கிடைக்காததால் தவிப்பு

வளரறி மதிப்பீடு பதிவு செய்ய இணைப்பு கிடைக்காததால் தவிப்பு



தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் எண்ணும் எழுத்தும் பயிற்சியில் 1,2,3 ம் வகுப்பு மாணவர்களுக்கு வளரறி மதிப்பீடு செய்து செயலியில் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இணையதள இணைப்பு கிடைக்காததால் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் எண்ணும், எழுத்தும் பயிற்சியில் 1,2,3 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பள்ளி வகுப்பறையில் வைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி செயலியில்வளரறி மதிப்பீடு செய்து ஆன் லைனில் பதிவு செய்ய ஜூலை 28 முதல் ஆக.,3 வரை அவகாசம் வழங்கப்பட்டது. பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி செயலிக்குள் சென்று வளரறி மதிப்பீட்டை பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறையில் இருந்து செயலிக்குள் செல்லும் போது இணைப்பு கிடைக்காமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது. வளரறி மதிப் பீடு செய்து பதிவு செய்ய முடியாத நிலை உள்ளதால், தொடக்கப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் வகுப்பறையில் கல்வி கற்பிக்கும் பணியும் பாதிக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை இது போன்ற மதிப்பீடு பணி வழங்கும் போது தொழில் நுட்ப குறைபாடு இல்லாமல் பதிவு செய்யும் விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 4,5 ம் வகுப்பு வளரறி மதிப்பீடு செய்ய முடியாத நிலையில் ஆசிரியர்கள் தவித்து வந்தனர். தற்போது 1,2,3 ம் வகுப்புக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.