செய்திக் குறிப்பு – முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 9, 2023

செய்திக் குறிப்பு – முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு



செய்திக் குறிப்பு எண்: 027/082023

செய்தி வெளியீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து

உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணிகள் வழங்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (9.8.2023) பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்தினார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதிகள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்பு திட்டங்கள், பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு சீரிய முறையில் அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி கற்பதற்காக 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், "இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும்.

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் அறிவிக்கப்பட்டது, இந்த உதவியைப் பெறலாம்" என்று அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), தேசிய தொழில்நுட்ப கழகம் (NIT), NIFT, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU). தேசிய சட்டப் பல்கலைக்கழகம், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் போன்ற முதன்மை கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றிட JEE, CUET, National Aptitude Test in Architecture போன்ற நுழைவுத் தேர்வுகளில் இந்த கல்வியாண்டில் வெற்றி பெற்றுள்ள சுமார் 247 அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, அவர்களின் கல்விச் செலவினத் தொகை முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்கிறது. இதன்மூலம் அம்மாணவ, மாணவியர் உயர்கல்வியை தடையின்றி பயில இயலும். பள்ளிக்கல்வித் துறை சார்பில் இன்று நடைபெற்ற விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் முனைவர் வி.காமகோடி, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் திரு. இரா. சுதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.