பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட அழைப்பு& விவாதிக்க வேண்டியக் கூட்டப்பொருள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 3, 2023

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட அழைப்பு& விவாதிக்க வேண்டியக் கூட்டப்பொருள்

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட அழைப்பு& விவாதிக்க வேண்டியக் கூட்டப்பொருள்

குழு உறுப்பினர்களுக்கும் வணக்கம்.

நம் பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டமானது வருகிற 04.08.2023 (வெள்ளிக் கிழமை) பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

விவாதிக்க வேண்டியக் கூட்டப்பொருள் • பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி சார்ந்து விவாதிக்க விரும்பும் கூட்டப்பொருள் மீது கலந்துரையாடி தேவையின் அடிப்படையில் உரிய தீர்மானங்களை நிறைவேற்றுவதை தலைமையாசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

• அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 14.7.2023 அன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், குறைந்தபட்சம் 25 முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் இணைந்து செயல்படும் வகையில், ஜூலை 20ஆம் தேதிக்குள்கண்டறிந்து tnschools.gov.in இணையதள பக்கத்தில்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் தற்போதையநிலை மற்றும் விவரங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் பற்றிக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 19.7.2023 அன்று நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்விற்கு வருகை புரியாத மற்றும் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்காத சார்ந்த பள்ளியின் எத்தனை மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. மேற்காண் கூட்டத்தில் பங்கேற்றுத் தமது விருப்பத்தைப் பதிவு செய்த எத்தனை மாணவர்கள் உயர்கல்வி (ITI & Polytechnic Colleges) கல்விநிலையங்களில் சேர்ந்து கல்வியை தொடர்கின்றனர் மற்றும் அதன் தொடர் முயற்சிகள் பற்றிய விவரத்தையும் கூட்டத்தில் தலைமையாசியர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

2.மாவட்ட அளவில் அனைத்து வகையிலும் சிறப்பாகச் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு 2023 ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று சார்ந்த மாவட்ட ஆட்சியர்களால் பாராட்டுச் சான்று வழங்கப்படவிருக்கிறது. இதன்பொருட்டு சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுவினை EMIS வழியாகத் தேர்வு செய்வதற்கான அடிப்படைகள் (Criteria) இணைப்பு-1இல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விவரத்தை அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் தவறாது பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இப்படிக்கு,

தலைமையாசிரியர்

(பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட அழைப்பாளர்)
விவாதிக்க வேண்டியக் கூட்டப்பொருள் 1 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி சார்ந்து விவாதிக்க விரும்பும் கூட்டப்பொருள் மீது கலந்துரையாடி தேவையின் அடிப்படையில் உரிய தீர்மானங்களை நிறைவேற்றுவதை தலைமையாசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

2 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 14.7.2023 அன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், குறைந்தபட்சம் முன்னாள் மாணவர்களை 25 பள்ளியுடன் இணைந்து செயல்படும் வகையில், ஜூலை 20ஆம் தேதிக்குள் கண்டறிந்து tnschools.gov.in இணையதள பக்கத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் தற்போதையநிலை மற்றும் விவரங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் பற்றிக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

3 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 19.7.2025 அன்று நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்விற்கு வருகை புரியாத மற்றும் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்காத சார்ந்த பள்ளியின் எத்தனை மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. மேற்காண் கூட்டத்தில் பங்கேற்றுத் தமது விருப்பத்தைப் பதிவு செய்த எத்தனை மாணவர்கள் உயர்கல்வி (ITI 5 Polytechnic Colleges) கல்விநிலையங்களில் சேர்ந்து கல்வியை தொடர்கின்றனர் மற்றும் அதன் தொடர் முயற்சிகள் பற்றிய விவரத்தையும் கூட்டத்தில் தலைமையாசியர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

4 மாவட்ட அளவில் அனைத்து வகையிலும் சிறப்பாகச் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு 2023 ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று சார்ந்த மாவட்ட ஆட்சியர்களால் பாராட்டுச் சான்று வழங்கப்படவிருக்கிறது. இதன்பொருட்டு சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுவினை EMIS வழியாகத் தேர்வு செய்வதற்கான அடிப்படைகள் (Criteria) இணைப்பு-1இல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விவரத்தை அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் தவறாது பகிர்ந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.