ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்குகள் சீராய்வு, உச்ச நீதிமன்ற மேல்முறையீடு தொடர்பாக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 7, 2023

ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்குகள் சீராய்வு, உச்ச நீதிமன்ற மேல்முறையீடு தொடர்பாக

ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்குகள் சீராய்வு, உச்ச நீதிமன்ற மேல்முறையீடு தொடர்பாக

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை.

*ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வு பெற முடியும் என்று சக்திவேல் வழக்கில் இரு நபர் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. *ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வு என்று இதுவரை மூன்று இரு நபர் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன.

*நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் சக்திவேல் வழக்கை சீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்த போது ,நீதிபதி சீராய்வு மனு தாக்கல் செய்தால் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

* பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று இதுவரை வந்துள்ள மூன்று இரு நபர் தீர்ப்புகளில் இரண்டு வழக்கில் அரசு பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்துள்ளது. சக்திவேல் வழக்கில் மட்டுமே பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

*வழக்கு தொடர்பாக நான் தெரிவித்துள்ள மேற்கண்ட சான்றுகளின் படி சீராய்வை விட ,உச்ச நீதிமன்றத்தில் அப்பில் செய்வதே சிறந்ததென கருதுகிறேன்.

தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களின் பொருளையும் காலத்தையும் சீராய்வில் விரயம் செய்வதற்கு பதிலாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது சரி என கருதுகின்றேன். எனது கருத்தில் குறைகளோ , நிறைகளோ என்பதை காலம் தான் பதில் சொல்ல கூடும் .

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.