NMMS - NSP இணையதளத்தில் பதிவேற்றம் செய்த மாணவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 7, 2023

NMMS - NSP இணையதளத்தில் பதிவேற்றம் செய்த மாணவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்

NMMS தேர்வில் வெற்றி பெற்று NSP இணையதளத்தில் பதிவேற்றம் செய்த மாணவர்கள், தங்களது விவரங்களில் 10.08.2023 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளிக் கல்வி 2022-23 ம் கல்வியாண்டின் மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் - தேசிய வருவாய் வழிதிறன் தேர்வு (National Means - cum - Merit Scholarship Scheme) விண்ணப்பித்த மாணவ / மாணவியரின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைத்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் - சார்பு.

பார்வை:

மத்திய கல்வித் துறை, சாஸ்த்திரி பவன், புதுடில்லி, கடிதம் F.No. SS- 15/8/2022-Scholarship-MoMA

பார்வையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு மாணவர்களுக்கு உரிய தொகை வங்கிக் கணக்கில் சென்றடைய ஏதுவாக மாணவர்களது ஆதார் எண்களை வங்கிக் கணக்குடன் இணைத்திடவும், மாணவர்கள் பதிவேற்றம் செய்த விண்ணப்பங்களில் (2022-23) உள்ள திருத்தங்கள் மேற்கொள்ள 10.08.2023 வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தேவைப்படும் நேர்வுகளில் மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட உள்நுழைவில் ( Applicant's login) திருத்தங்களை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் வழியே தொடர்புடைய மாணவர்களுக்கு அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தொடர்புடைய மாணவர்களுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டமைக்கான விவரத்தினை தலைமையாசிரியர்களிடமிருந்து பெற்று ஆவணமாக பராமரித்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.