ஆசிரியையிடம் ரூ.15¼ லட்சம் மோசடி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 22, 2023

ஆசிரியையிடம் ரூ.15¼ லட்சம் மோசடி



ஆசிரியையிடம் ரூ.15¼ லட்சம் மோசடி

வெளிநாட்டில் இருந்து தங்கநகையை பரிசாக அனுப்புவதாக கூறி, ஆசிரியையிடம் ஆன்லைன் மூலம் ரூ.15¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் கோவை வெளிநாட்டில் இருந்து தங்கநகையை பரிசாக அனுப்புவதாக கூறி, ஆசிரியையிடம் ஆன்லைன் மூலம் ரூ.15¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியை கோவை காளப்பட்டி, திருமுருகன் நகரை சேர்ந்தவர் மாலதி (வயது37). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் முகநூல் மூலம், கிளிண்டன் என்ற பெயருடைய நபர் அறிமுகம் ஆனார்.

அவர், லண்டனில் வசிப்பதாகவும், பி.எம்.டபிள்யு கார் சர்வீஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியதாகவும் கூறினார். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இந்தியா வர உள்ளதாக வும், உங்களுக்கு விலை மதிப்புள்ள தங்க நகைகளை விமான பார்சலில் அனுப்பி வைப்பதாகவும் கூறி உள்ளார்.

தங்கம், வெளிநாட்டு பணம் இந்த நிலையில் வேறு ஒரு போன் எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், டெல்லி விமானத்தில் எனக்கு பார்சல் வந்து இருப்பதாகவும், அதற்கு ரூ.32 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி பெற்று கொள்ளுமாறும் தெரிவித்து உள்ளார். இதையடுத்து விமான சுங்கத்துறையில் இருந்து அழைப் பதாக கூறி மாலதியிடம் பேசி உள்ளனர். அவர்கள், அந்த பார்சலில் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் இருப்பதால் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர். மேலும் பார்சல் தொடர்பான புகைப்படங்களை வாட்ஸ்-அப்பில் அனுப்பி இருந்தனர். ரூ.15¼ லட்சம் மோசடி அதை நம்பி எனது நகைகளை விற்று மொத்தம் ரூ.15 லட்சத்து 22 ஆயிரத்தை அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தினேன்.

அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடிய வில்லை.

இதனால் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.

அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் மோசடி, ஐ.டி. சட்டப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர் லண்டனை சேர்ந்தவரா? அல்லது போலி முகவரி யில் தொடர்பு கொண்டு பேசி மோசடி செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் முகநூலில் தொடர்பு கொள்ளும் நபர்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.