காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் தினமலர் பத்திரிகைக்கு இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 31, 2023

காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் தினமலர் பத்திரிகைக்கு இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம்

*மனமலம் வெளிப்படுகிறதா?* *அறுவெறுக்கத்தக்க தலைப்புக்கும் கீழான நோக்கத்திற்கும் இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கடும் கண்டனம்.*

மக்களுக்காக செய்திகளை அச்சு வடிவில் காட்சி வடிவில் மின்னனு வடிவில் என பல வகைகளில் தருவது என்பது தான் ஊடகங்களின் அடிப்படை விதி. ஊடகங்களின் கடமையும் செயல்பாடும் அதுவே. சமீப காலங்களில் சில ஊடகங்கள் தங்களது அடிப்படை விதிகளை அழித்துவிட்டு செய்திகளை பொய்திகளாக மாற்றும் பாதாள பாதைக்கு பயணித்து வருவது வேதனைக்குறியது மட்டுமல்ல கண்டனங்களுக்கும் உரியது.

கட்சி,அமைப்புகளின் ஊதுகுழல் ஊடகங்கள் கூட தன் நிலை தாழாது தடம் மாறாமல் குறைந்த பட்ச தரத்தினை குறைத்துக் கொள்ள கூடாது.

இதையெல்லாம் மீறி இன்றைய திருச்சி தினமலர் தனது முதல் பக்கத்தில் வெளியிட்ட தலைப்பு மனமலத்தின் வெளிப்பாடு என்றே கருதுகிறோம். *ஊடகங்களின் நலன் ஊடகவியலாளர்களின் நலன் காப்பது பத்திரிகை அமைப்புகளின் கடமை என்றால் இது போன்ற கீழான மனித குலத்திற்கு விரோதமான நச்சுக்களை கண்டிப்பதும் நிச்சயமான கடமை தான்.*
முன்னாள் முதல்வர்கள் காமராஜர்,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா, கலைஞர் என தொடர்ந்து தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை சிறப்பாகவே தொடர்ந்து கொண்டிருக்கும் முன்னோடி மாநிலம் நமது தமிழ்நாடு.

*வாடிய பயிறைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் பெருமானின் மண் இது.தமிழ்நாட்டில் மாணவ செல்வங்கள் காலை உணவின்றி பசியால் வாடிடக் கூடாது என்ற மிக உயர்ந்த நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தை இழிவுப் படுத்துவதாக கருதி ஊடகத்தை இழிவுப் படுத்தியிருக்கிறார்கள்.தினமலர் திருச்சி பதிப்பின் இந்த கீழான செயலைக் கண்டும் காணமல் இருப்பதும் கயமைத்தனத்தமே.* இந்த கீழான மனமலத்தின் வெளிப்பாடான அருவருப்பான செய்தி தலைப்பை வெளியிட்ட *தினமலர் திருச்சி பதிப்பிற்கு கடுமையான கண்டனங்கள். தமிழக மக்கள் முன் தனது மன்னிப்பை வருத்தங்களை அவர்கள் வெளியிட வேண்டும் என்றும் இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் வலியுறுத்துகிறது* . மற்ற பத்திரிகையாளர் அமைப்புகளும், அறிவார்ந்த சமுக பொறுப்பு கொண்ட அமைப்புகளும் இந்த கொடுமையைக் கண்டிக்க முன் வர வேண்டும்.

*கா.அசுதுல்லா* *தேசிய துணைத்தலைவர்* *இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம்* 31-08-2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.