DGE - ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு - தேர்வுத்துறை அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 28, 2023

DGE - ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு - தேர்வுத்துறை அறிவிப்பு.

DGE - ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு - தேர்வுத்துறை அறிவிப்பு. - DGE - April 2023 Opportunity to make corrections in original marks certificates of Class 10 Public Examination School Students - Notification of Examination Department. - ஏப்ரல் 2023 இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் - பள்ளி மாணவர்கள்/ தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தங்கள் குறித்து தகவல் தெரிவித்தல் - தொடர்பாக.

நடைபெற்ற ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களில் தேர்வர்களின் தலைப்பெழுத்து, பெயர் (தமிழ் / ஆங்கிலம்), தாய் மற்றும் தந்தை பெயர் (தமிழ்/ ஆங்கிலம்), பிறந்த தேதி, புகைப்படம், பள்ளியின் பெயர் (தமிழ்/ஆங்கிலம்) ஆகியவற்றில் திருத்தங்கள் கோரி பெறப்படும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வர்களின் பத்தாம் வகுப்பு மாற்றுச்சான்றிதழ்களுடன் இணைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் 28.08.2023 முதல் 08.09.2023 வரை ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு திருத்தங்கள் கோரி பெறப்படும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் 09.09.2023 முதல் 22.09.2023 வரையிலான நாட்களில் தங்களுக்கான USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி www.dge. tn.gov.in என்ற இவ்வலுவலக இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், தனித்தேர்வர்களிடமிருந்து திருத்தங்கள் கோரி பெறப்படும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.