முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி நடத்துதல் சார்ந்து - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,நாள்.23.08.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 24, 2023

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி நடத்துதல் சார்ந்து - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,நாள்.23.08.2023



Centenary Celebrations of Muthamil Scholar Artist Mu Karunanidhi Dependent on Conducting Essay Competition for School Students - Proceedings of Director of School Education, Date.23.08.2023 முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி நடத்துதல் சார்ந்து - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,நாள்.23.08.2023

2023-2024 ஆம் கல்வியாண்டில் பள்ளி அளவிலான மன்ற செயல்பாடுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து வட்டார. மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துவது சார்ந்து அறிவுரைகள் பார்வை (2) இல் கண்டுள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பள்ளி இலக்கிய மன்ற நிகழ்வுகளில் சிறப்பாக பங்காற்றி வட்டார அளவிலான போட்டிகளுக்கு ஜூன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளுக்கு பகுத்தறிவு. சீர்திருத்தச் செம்மல் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சமூக சீர்த்திருத்தங்களின் அடிப்படையிலான பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இவ்விவரத்தினை தலைமை ஆசிரியர்கள் வழியே வட்டார அளவிலான போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எதிர்வரும் 30.08.2023 மற்றும் 31.08.2023 ஆகிய நாட்களில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வட்டார அளவிலான பேச்சுப்போட்டி. கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகளை நடத்திட தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 10.11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேற்கண்டுள்ள தலைப்புகளில் தனிப்பிரிவாக பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை வட்டார அளவில் நடத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வட்டார அளவிலான பிற மன்ற செயல்பாடுகளுக்கான போட்டிகள் குறித்த விவரம் தனியே அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 2022- 2023 ஆம் கல்வியாண்டில் பள்ளி அளவில் நடைபெற்ற மன்ற செயல்பாடுகள் மற்றும் வட்டார அளவிலான போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களை எதிர்வரும் 28.08.2023 க்குள் EMIS இணையதளத்தில் பள்ளி Login-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களை பதிவுசெய்திட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கவும் பள்ளித் துணை ஆய்வாளர்கள் இதனை தொடர்ந்து கண்காணித்து வட்டார அளவிலான போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது
கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்புகள்

1.பட்டத்தரசிகள் இல்லாக் குடும்ப முதல் தலைமுறையினர் பட்டப் படிப்பில் கலைஞரின் சீர்திருத்தங்கள்.

2. கைம்பெண்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கலைஞரின் பேனா

3. "உள் ஒதுக்கீடு" - சமூக நீதியின் புதிய பரிமாணம் 4.சமூக நீதிக்கான கலைஞரின் அற்புதத் திட்டங்கள்

5. கலைஞரின் திருநங்கையர் நலத் திட்டங்கள்

6. மகளிருக்கு சொத்துரிமை - கலைஞரின் சமூகப் புரட்சி

7. இட ஒதுக்கீட்டின் சமூக நீதி -கலைஞரின் சாதனை

8. நிர்வாகச் சீர்திருத்தம் - கலைஞர் உருவாக்கிய புதிய சட்டங்கள் 9. மகளிருக்கு இட ஒதுக்கீடு -கலைஞரின் தொலைநோக்கு

10. நிலச் சீர்திருத்தத்தில் கலைஞரின் நில உச்சவரம்புச் சட்டம் பேச்சுப் போட்டி தலைப்புகள்

1. சமத்துவபுரம் என்னும் சமூகப் புரட்சி

2. தேசியக் கொடி ஏற்றுவதில் மாநில உரிமை கண்ட கலைஞர்

3.கலைஞர் ஆட்சியில் பெண்ணுக்கு நீதி

4.கலைஞர் ஆட்சியின் நிர்வாகச் சீர்திருத்தங்கள்

5. பெரியார் வழியில் கலைஞர் 6.69 சதவீத இட ஓதுக்கீடுகள் வளர்ந்த வரலாறு

7. அறநிலைய அமைச்சகம் அமைத்த பகுத்தறிவாதி கலைஞர்

8.காவலர் நலனுக்கு கலைஞரின் சீர்திருத்தங்கள்.

9. திருநங்கையரை மூன்றாம் பாலினமாக அறிவிக்க கலைஞர் முயற்சியும் வெற்றியும்

10. பத்திரம் பதிவு முறையில் கலைஞர் அவர்களின் சீர்திருத்தம்.

CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,நாள்.23.08.2023 PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.