காலை உணவு திட்டம்: அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏமாற்றம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 26, 2023

காலை உணவு திட்டம்: அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏமாற்றம்!

காலை உணவு திட்டம்: அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏமாற்றம்

அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏமாற்றம்

'அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டத்தை செயல்படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது' என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் மயில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் உள்ள, 31,௦௦௮ அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை, முன்னாள் முதல்வர் காமராஜர் அமல்படுத்தினார். அதனை, எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டமாக தரம் உயர்த்தினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும், அனைத்து நலத்திட்ட உதவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், காலை உணவு திட்டம் மட்டும், இப்பள்ளி மாணவர்களுக்கு இல்லை என்பது நியாயமில்லை.

அரசுப்பள்ளிகள் இல்லாத இடங்களில், அரசு உதவி பெறும் பள்ளிகள் துவங்கப்பட்டன. இரு பள்ளிகளிலும் ஒரே பொருளாதார நிலை உடைய மாணவர்களே படிக்கின்றனர். எனவே, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை அரசு விரிவுபடுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.